Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (24.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 


மாதாந்திர மின் பராமரிப்பு பணி 


தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  
மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.


Ranji Trophy 2025 : இனி ரோகித் Comeback இல்ல.. Go back தான்! ரஞ்சியிலும் சொதப்பிய இந்திய டாப் ஆர்டர்..


மின்நிறுத்த நேரம் 


பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...


மணல்மேடு துணை மின் நிலையம் 


அந்தவகையில் நாளை 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று மணல்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் 11.கி.வோ IPDS நகர் மின்பாதைகள் மற்றும் மணல்மேடு உயரழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மேற்கண்ட மின்பாதைகளில் இருந்து மின் வினியோகம் பெறும் கிழாய், களத்தூர், கேசிங்கன், ஆத்தூர், கல்யாணசோழபுரம், மணல்மேடு நகரம், விருதாங்கநல்லூர், உத்திரங்குடி மற்றும் இராதாநல்லூர், இலுப்பபட்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மணல்மேடு உதவி செயற்பொறியாளர் இளையராஜா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Shreyas Iyer: கோடிகளில் ஏலம்.. ஆனா ”பொய்யா சொல்றாருப்பா”, ஸ்ரேயாஸ் அய்யரை கிழித்து தொங்கவிட்ட முன்னாள் வீரர்


மாறுதலுக்கு உட்பட்டது 


மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.