Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21.11.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 


மின் பராமரிப்பு பணி 


தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை  அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


Rafael Nadal : களிமண் ராஜா.. ஸ்பெயினின் தங்க மகன்.. ஓய்வு பெற்றார் ரஃபெல் நடால்



Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறையில் (21.11.2024) நாளை மின் தடை - எங்கெல்லாம் தெரிஞ்சிக்க உள்ள போய் பாருங்க..!


மயிலாடுதுறை கோட்ட உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பு 


இதேபோன்று  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்ட உதவி செயற்பொறியாளர் பாலமுருகன்  விடுத்துள்ள செய்தி குறிப்பில் மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் மங்கநல்லூர் உயரழுத்த மின் பாதையில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மங்கநல்லூர், ஆனந்தநல்லூர், கந்தமங்களம், மேலமங்கநல்லூர், பெரம்பூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 21-ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.


அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!




பொதுமக்களுக்கு அறிவுத்தல்


மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.


AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?