மயிலாடுதுறை: மயிலாடுதுறை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வருகின்ற மே 21 ஆம் தேதி (வியாழக்கிழமை) நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மயிலாடுதுறை பேச்சாவடி துணைமின் நிலையத்தின் உதவி செயற்பொறியாளர் (பராமரிப்பு) பொறிஞர் அப்துல் வஹாப் மரக்காயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யவும் அவ்வப்போது இத்தகைய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, வரவிருக்கும் மே 21 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் நிறுத்தம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்

மயிலாடுதுறை நகரின் பெரும்பாலான வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகள் இந்த மின் நிறுத்தத்தால் பாதிக்கப்படும். செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான பட்டியல் இதோ:

Continues below advertisement

* பெசன்ட் நகர்

* மேலவீதி

* மேலமடவிளாகம்

* அய்யாரப்பர் கீழவீதி

* அய்யாரப்பர் தெற்குவீதி

* சுப்ரமணியபுரம்

* ஆராயதெரு

* காமராஜர் காலனி

* ஸ்ரீ நகர் காலனி

தெருக்கள்: 

* 1-5 புது தெரு

* தைக்கால் தெரு

* டபிர் தெரு

* தெற்குவீதி

* அரண்மனை நகர்

* திருவள்ளுவர் நகர்

* பூக்கடை தெரு

* அண்ணாவீதி

* மேலஒத்தசரகு

* ஜங்ஷன்,

* கஸ்தூரி பாய் தெரு

* தெற்கு சாலியதெரு

* பெரிய சாலியதெரு 

* வடக்கு சாலியதெரு 

* அய்யாரப்பர் கோவில் தெரு

* திருவள்ளுவபுரம்

* அய்யனார் கோயில் தெரு

* ஹாஜியார் நகர்

* பட்டமங்கலதெரு

* பியர்லஸ் தியேட்டர் பகுதி

* சின்னகண்ணாரதெரு

* கச்சேரி ரோடு 

* கலைஞர் காலனி

* காமராஜர் சாலை

* நீதிமன்ற வளாகம்

* ரேவதி நகர்

* புனுகீஸ்வரர் கோயில் நான்கு வீதிகள்

* கூறைநாடு

* பாசிகடைத்தெரு

* அறுபத்து மூவர்பேட்டை

* மேம்பாலம் மற்றும் நகரின் மையப்பகுதிகள்

கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகள்

நகரம் மட்டுமின்றி, இந்த துணைமின் நிலையத்தின் கீழ் வரும் பல்வேறு கிராமப்புற மின்பாதைகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

* மூவலூர்

* சித்தர்காடு

* அரையபுரம்

* மறையூர்

* மகாதானதெரு 

* பெரியகடைத்தெரு.

* வழுவூர்

* எலந்தங்குடி

* கப்பூர்

* வடகரை

* அன்னவாசல்

* இளையாளர்

* அரங்ககுடி

* செறுதியூர்

* குளிச்சார்

* மங்கநல்லூர்

* திருவாரூர் ரோடு மற்றும் சீனிவாசபுரம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் இருக்காது.

பராமரிப்பு பணிகளின் நோக்கம்

இந்த மின் நிறுத்தத்தின் போது, துணைமின் நிலையத்தில் உள்ள மின் மாற்றிகள் (Transformers), உயர்மின்னழுத்த கம்பிகள் மற்றும் மின் பகிர்மானக் கட்டமைப்பு ஆகியவற்றில் தேய்மானம் அடைந்த பாகங்களை மாற்றுதல், மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்

மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர்கள், தங்களின் அன்றாடத் தேவைகளை இந்த நேரத்திற்கு முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, குடிநீர் விநியோகம் மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்வது அவசியமாகும்.

மாறுதலுக்கு உட்பட்டது 

நிர்வாக காரணங்களைப் பொறுத்து இந்த மின் நிறுத்தத் தேதியில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த மின் பராமரிப்பு பணிகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மயிலாடுதுறை மின்வாரியத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.