சீர்காழி: தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

Continues below advertisement

மின்நிறுத்த நேரங்கள் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள அத்தியாவசிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) சீர்காழி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

பராமரிப்புப் பணிகள் மற்றும் காலநேரம்

இது குறித்து வைத்தீஸ்வரன்கோவில் 110/33-11 கி.வோ துணை மின் நிலையத்தின் உதவி செயற்பொறியாளர் (பராமரிப்பு) கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வைத்தீஸ்வரன்கோவில் 110/33/11 கி.வோ துணை மின் நிலையத்தில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யவும், மின்கம்பிகள் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை நீக்கவும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, 19.02.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்

இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

* வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

* சீர்காழி நகரம் முழுவதும்.

* புங்கனூர், சட்டநாதபுரம் மற்றும் மேலச்சாலை.

* கதிராமங்கலம், ஆத்துக்குடி மற்றும் திருப்புங்கூர்.

* தென்பாதி, பனமங்கலம் மற்றும் கோவில்பத்து.

* கொள்ளிடம் முக்கூட்டு, விளந்திட சமுத்திரம் மற்றும் புளிச்சகாடு.

* கற்பகம் நகர், புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் சார்ந்த பகுதிகள்.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்

மின்வாரியம் மேற்கொண்டுள்ள இந்த பராமரிப்புப் பணிகள் காரணமாக, அன்றைய தினம் காலை முதல் மாலை வரை மின்சாரம் இருக்காது என்பதால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை முன்னதாகவே பூர்த்தி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், இந்த மின்நிறுத்த அறிவிப்பானது மின்கட்டமைப்பு சூழல் மற்றும் இதர தொழில்நுட்பக் காரணங்களைப் பொறுத்து கடைசி நேரத்தில் மாற்றங்களுக்கு உட்பட்டது என்றும் மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், மாலை 05.00 மணிக்கு மேல் படிப்படியாக மின் விநியோகம் சீர் செய்யப்படும். பொதுமக்கள் இந்த மின் நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு உதவி செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.