மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தின் மின் கட்டமைப்பு மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நாளை 2026 பிப்ரவரி 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட இரண்டு மிக முக்கியமான துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Continues below advertisement

இது குறித்து மயிலாடுதுறை நகர உதவி செயற்பொறியாளர் அப்துல் வாஹப் மரைக்காயர் மற்றும் விஜயபாரதி உதவி செயற்பொறியாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்தடை ஏற்படும் இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பராமரிப்பு பணிகளின் அவசியம்

மின் இணைப்புகளில் ஏற்படும் பழுதுகளைத் தடுத்தல், உயர் அழுத்த மின் கம்பிகளில் உராய்ந்து கொண்டிருக்கும் மரக்கிளைகளை அகற்றுதல், மின்மாற்றிகளில் (Transformers) எண்ணெய் அளவை சரிபார்த்தல் மற்றும் பழுதடைந்த மின் உபகரணங்களை மாற்றுதல் போன்ற பணிகள் இந்த மாதாந்திர பராமரிப்பின் போது மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வரும் காலங்களில் தடையில்லா மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்க முடியும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

மின்தடை நேரம் மற்றும் இடங்கள்

நாளை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பணிகள் நடைபெறும் என்பதால், சுமார் 8 மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீடூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்

நீடூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளால், அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மற்றும் நகர எல்லையோரப் பகுதிகள் பாதிக்கப்படும். 

அதன் விவரம்

முக்கிய இடங்கள்: 

* நீடூர்

* மல்லியக்கொல்லை

* வில்லியநல்லூர்

* கொண்டல்

* பாலக்குடி

* தாலஞ்சேரி 

* கொற்கை.

* அருண்மொழிதேவன்

* கங்கணம்புத்தூர்

* மேலாநல்லூர்

* நடராஜபுரம்

* கீழமருதாந்தநல்லூர்

* மேலமருதாந்தநல்லூர் 

* பொன்வாசநல்லூர்

* மாப்படுகை

* ஆனந்தக்குடி 

* சோழப்பேட்டை

* மணலூர் 

ஆகிய ஊர்களுக்கும் அவற்றைச் சுற்றியுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நாளை மின் விநியோகம் இருக்காது.

மயிலாடுதுறை (பேச்சாவாடி) துணை மின் நிலைய பகுதிகள்

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதிகள் மற்றும் முக்கிய வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகள் இந்த துணை மின் நிலையத்தின் கீழ் வருகின்றன.

நகரப் பகுதிகள்: 

* மயிலாடுதுறை நகரின் பிரதான பகுதிகள்

* பட்டமங்கல தெரு

* மகாதான தெரு

* பெரிய கடைத்தெரு 

 * கூறைநாடு

சுற்றுவட்டாரப் பகுதிகள்: 

 * மூவலூர் 

* சித்தர்காடு

* அரையபுரம்

* மறையூர்

* வழுவூர்

* எலந்தங்குடி

* கப்பூர்

* வடகரை

* இதர கிராமங்கள்: 

* அன்னவாசல்

* இளையானூர்

* அரங்ககுடி

* செறுதியூர்

* குளிச்சார் மற்றும்

மங்கநல்லூர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்

இந்த நீண்ட நேர மின்தடை காரணமாக பொதுமக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளான குடிநீர் சேமிப்பு மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றுவது போன்ற பணிகளை காலை 9 மணிக்கு முன்னதாகவே முடித்துக்கொள்ளவது, மின்தடை நேரத்தில் மின் சாதனங்களின் ஸ்விட்சுகளை அணைத்து வைப்பது, மின்சாரம் மீண்டும் வரும்போது ஏற்படும் திடீர் அழுத்த மாறுபாடுகளில் இருந்து உபகரணங்களைப் பாதுகாக்கும்.

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், கணினி மையங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த நேர மாற்றத்திற்கு ஏற்ப தங்கள் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.

நிர்வாகக் குறிப்பு

மின்வாரிய அறிவிப்பின்படி, இந்த பராமரிப்பு பணிகள் திட்டமிடப்பட்ட கால அவகாசத்திற்குள் முடிக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு முன்னதாகவே பணிகள் நிறைவடைந்தால் உடனடியாக மின் விநியோகம் சீர் செய்யப்படும். இருப்பினும், நிர்வாகக் காரணங்களினாலோ அல்லது காலநிலை மாற்றங்களினாலோ பணிகளில் தாமதம் ஏற்பட்டால், மின் விநியோகம் மீண்டும் தொடங்குவதில் சிறிய காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மின்நிறுத்தம் வாபஸ் பெறவும் வாய்ப்புகள் உண்டு. பொதுமக்கள் இந்த மின் பராமரிப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.