Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (09.11.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

Continues below advertisement

மின் பராமரிப்பு பணி 

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

SECI Bars Reliance Power: ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு 3 ஆண்டுகளுக்கு தடை - அம்பானிக்கு பேரிடி, காரணம் என்ன?

Continues below advertisement

சீர்காழி மின்வாரிய கோட்டம் 

அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய சீர்காழி கோட்டத்தில் எதிர்வரும் 09/11/2024 சனிக்கிழமை அன்று எடமணல் துணைமின் நிலையத்தில் உள்ள 11 KV கூழையார் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11 KV கூழையார் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது‌.

Skoda Kylaq: ஸ்கோடா கைலாக் - ஒவ்வொரு வேரியண்டிலும் உள்ள அம்சங்கள் என்ன? எது பெஸ்ட் ட்ரிம், மொத்த விவரம் இதோ..!

திருவெண்காடு துணைமின் நிலையம் 

அதேபோன்று அன்றைய தினம் திருவெண்காடு துணைமின் நிலையத்தில் உள்ள 11 கிவோ காத்திருப்பு உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11 கிவோ காத்திருப்பு உயரழுத்த மின்பாதையில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது எனவும், மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து மின்நிறுத்தம் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என்று மு. விஜயபாரதி உதவிசெயற்பொறியாளர் இயக்குதலும் &பராமரித்தலும், தெற்கு சீர்காழி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

Cucumber Dosa: ஸ்பெஷல் தோசை ட்ரை பண்ண ஆசையா? நடிகர் பிரசாந்த் பரிந்துரைக்கும் ரெசிபி இதோ!

மின்நிறுத்தம் செய்யப்பட்டும் இடங்கள் 

எமணல் வழுதலகுடி, ராதாநல்லூர், திருமுல்லைவாசல், தாழந்தொண்டி, ஆமபள்ளம் அதன் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் நாங்கூர், பாகசாலை, காத்திருப்பு, அண்ணன்பெருமாள்கோவில், திருக்காட்டுப்பள்ளி, தொக்களாக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட்ட உள்ளது.

மயிலாடுதுறை மின் கோட்டம்

மயிலாடுதுறை மின்வாரிய கோட்டம் மணக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் மாப்படுகை ரோடு, சோழசக்கரநல்லூர், சேந்தங்குடி, வெள்ளாலகரம், பல்லவராயன் பேட்டை, திருவிழந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் 09.11.2024 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.