மயிலாடுதுறை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இன்றைய தினம் மே 16, 2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மயிலாடுதுறை நகரம், சீர்காழி, செம்பனார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய கிராமப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை நகரம் மற்றும் மணக்குடி பகுதிகள்

மயிலாடுதுறை கோட்ட உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி, மயிலாடுதுறை டவுன் மற்றும் மணக்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மயிலாடுதுறை நகரின் முக்கிய பகுதிகளான:* பழைய SBI தெரு* அரசு மருத்துவமனை வளாகம்* மகாதான தெரு* பெரிய கடைத்தெரு * புளியந்தெரு* தர்மகுளம் மெயின் ரோடு* மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்* ஏ.வி.சி கல்லூரி,* மன்னன்பந்தல்* ஆனந்த தாண்டவபுரம் ரோடு* மாப்படுகை ரோடு* ஆழ்வார் குளம் பகுதி* திருவிழந்தூர்* சீர்காழி ரோடு* பஜார் கடைத்தெருமற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் 

மணக்குடி துணை மின் 

* சேமங்கலம்* ஆலவேலி* நத்தம்* வேப்பங்குளம்* சாவடி* உளுத்துக்குப்பை* ஆனதாண்டவபுரம்* மொழையூர் * கீழிருப்பு* மாப்படுகைமற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதிகள் 

Continues below advertisement

பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் பகுதிகள்

மயிலாடுதுறை கோட்டத்தின் மற்றொரு அறிவிப்பின்படி, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ரேணுகா தெரிவித்துள்ளார்.

* பாலையூர்* பருத்திக்குடி* காரணூர்* நக்கம்பாடி* மாந்தை* கங்காதரபுரம்* தேரழுந்தூர்* கோமல்* கள்ளிக்காடு* பெரட்டக்குடி* கந்தமங்கலம்* வடமட்டம்* காஞ்சிவாய்* கோனேரிராஜபுரம் * மேக்கிரிமங்கலம் * பழையகூடலூர் * கொக்கூர்* திருவாலங்காடு* திருவாவடுதுறை மற்றும் பேராவூர்.

சீர்காழி மற்றும் ஆச்சாள்புரம் பகுதிகள்

இதேபோன்று சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட ஆச்சாள்புரம் மற்றும் அரசூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சுமார் 26-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக உதவி செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

* ஆச்சாள்புரம்* மாதானம்* கொள்ளிடம்* ஆணைக்காரன்சத்திரம்* நல்லூர்* நாதல்படுகை* மகேந்திரப்பள்ளி* சரஸ்வதிவிளாகம்* அளக்குடி* புளியந்துறை* பழையார்* புதுப்பட்டினம் * பச்சைபெருமாநல்லூர்* சீயாளம்* தாண்டவன்குளம்* வடரங்கம்* அகணி

மற்றும் குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்தடை அமலில் இருக்கும்.

செம்பனார்கோவில் - மேமாத்தூர் பகுதிகள்

செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர் பொறி.C.சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 33/11 KV மேமாத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான:

* கீழ்மாத்தூர்* வாழ்க்கை* வல்லம்* பழையதிருச்சம்பள்ளி* பெரியமடப்புரம்* முக்குரும்பூர்* மாத்தூர்* மேமாத்தூர்* சாத்துனூர்* கீழபரசலூர்* மேலபரசலூர்* பரசலூர்* ஆறுபாதி* விளநகர்* மேலகட்டளை* கடலி* ஒட்டங்காடு* நெடுவாசல்*  பெருங்குடி* கூடலூர் மற்றும் ராதாநல்லூர் ஆகிய பகுதிகளில் மே 16 அன்று மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்

மின்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின் நிறுத்தம் செய்யப்படுவதால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மின் நிறுத்த நேரத்திற்கு முன்பாகவே பூர்த்தி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த மின்தடை அறிவிப்பானது மின் விநியோகப் பாதையில் மேற்கொள்ளப்படும் பணிகளின் அளவைப் பொறுத்து அல்லது இதர தொழில்நுட்பக் காரணங்களால் கடைசி நேர மாற்றங்களுக்கு உட்பட்டது என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர்கள் இந்த மின் நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.