மயிலாடுதுறை: மயிலாடுதுறை கோட்டம் மற்றும் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் ஜூலை 16ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் உதவி செயற்பொறியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறும், இந்த அறிவிப்பைத் தங்களது அன்றாடத் திட்டமிடலுக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Continues below advertisement

பெரம்பூர் துணை மின் நிலையப் பகுதிகள்

மயிலாடுதுறை புறநகர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவின் உதவி செயற்பொறியாளர் பொறிஞர் G. ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, பெரம்பூர் துணை மின் நிலையத்தில் 16.07.2026 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெறும் முக்கியக் கிராமங்களான ;

* பெரம்பூர்* கடக்கம்* கிளியனூர்* சேத்தூர்* முத்தூர்* எடக்குடி* பாலூர்* கொடைவிளாகம்* ஆத்தூர் ஆகிய ஊர்களுக்கும்,

Continues below advertisement

அதனைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் முற்றிலும் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையப் பகுதிகள்

இதேபோல் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில் 110/33/11 கிவோ துணை மின் நிலையத்திலும் அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இது குறித்து வைத்தீஸ்வரன்கோவில் இயக்கல் மற்றும் பராமரிப்பு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் பொறிஞர் P. கலைச்செல்வி விடுத்துள்ள அறிவிப்பில், இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் சீர்காழி முழுவதும் மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 

* புங்கனூர்* சட்டநாதபுரம்* மேலச்சாலை* கதிராமங்கலம்* ஆத்துக்குடி* திருப்புங்கூர் * தென்பாதி* பனமங்கலம்* கோவில்பத்து* கொள்ளிடம் முக்கூட்டு * விளந்திடசமுத்திரம்* புளிச்சகாடு* கற்பகம் நகர்* புதிய பேருந்து நிலையம்* பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சார்ந்த சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும்.

எடமணல் துணை மின் நிலையப் பகுதிகள்

கீழ் வரும் மற்றொரு முக்கிய நிலையமான 33/11 கிவோ எடமணல் துணை மின் நிலையத்திலும் அன்றைய தினமே பராமரிப்புப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதனால் * எடமணல்* திட்டை* செம்மங்குடி* திருமுல்லைவாசல்* தொடுவாய்* கடவாசல்* வடகால்* வேட்டங்குடி* திருக்கருக்காவூர் மற்றும் அதனைச் சார்ந்த சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் தடைபடும் என்று மின் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு மின் வாரியத்தின் முக்கிய வேண்டுகோள்

இந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகளின் போது, மின் கம்பிகளில் தொடும் மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் மாற்றிகளை (Transformers) சீரமைத்தல் மற்றும் மின் பாதைகளில் உள்ள உபகரணங்களைப் புதுப்பித்தல் போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்படும். மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற எதிர்கால மின் விநியோகத்தைக் கருத்தில் கொண்டு இந்த மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் மின்சாரக் கட்டமைப்பு மற்றும் இதர தட்பவெப்ப காரணங்களைப் பொறுத்து இந்த மின் நிறுத்த நேரத்தில் கடைசி நேர மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அன்றாடத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு மின் வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் மாலை 5.00 மணிக்கு மேல் படிப்படியாக மின் விநியோகம் வழக்கம்போல் சீராக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.