இரண்டாவது ஆண்டாக பூம்புகார் தொகுதியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 63 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பேனாக்களை வழங்கியுள்ளார்.
இலவச போனா
கடந்த ஆண்டு மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டியினை வழங்கிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் அப்போது தனது தொகுதி மாணவர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வு எழுத இலவசமாக பேனா வழங்குவதாக தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பங்கேற்று 192 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
Isha Foundation: ஆதியோகியின் அருளையும் அள்ளித் தரும் "சிவாங்கா சாதனா" - முழு விவரம் இதோ..!
திறமையை நம்பி செயல்பட்ட வேண்டும்
அப்போது நிகழ்சியில் பேசிய எம்எல்ஏ நிவேதா முருகன், எதிர்வரும் பொது தேர்வில் தனது பூம்புகார் தொகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு பூஜை செய்து பேனா வழங்க உள்ளதாகவும், எனவே மாணவர்கள் தான் பூஜை செய்து கொடுக்கும் பேனாவை மட்டும் நம்பி இல்லாமல் தங்களது திறமையை நம்பி செயல்பட்டு, பொதுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அதனை நிறைவேற்றும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுத்தேர்வு எழுதும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் நேரில் சென்று பேனாக்கள் வழங்கினார்.
மீண்டும் போனா வழங்கும் திட்டம்
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 28-ம் தேதியும் தொடங்கும் நிலையில் இந்தாண்டும் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என மாவட்டத்தில் உள்ள 63 பள்ளிகளை சேர்ந்த 10,11, மற்றும் 12 -ம் வகுப்பு படிக்கும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு சுமார் 80 ரூபாய் மதிப்புள்ள பேனாவை வழங்கியுள்ளார். முன்னதாக அதற்கான நிகழ்ச்சி இன்று பூம்புகார் அருகே மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பேனாக்களை வழங்கி வேணா வழங்கும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்ட பல கலந்துகொண்டனர்.