டெல்டா மாவட்டங்களில் சாலைகளில் சுற்றி திரியும் ஆயிரக்கணக்கான ஆதரவற்றோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளை வழங்கும் சேவை பணியை மயிலாடுதுறையை சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதிமோகன் தொடங்கியுள்ளார்.


சமூகசேவை 


சமூகத்தில் சேவை செய்ய நேரமில்லாதவர்கள், நேரமிருந்தும் மணமில்லாதவர்களுக்கு மத்தியில் தான், தங்கள் நேரத்தை, வாழ்நாட்களை சேவை செய்வதற்காக அர்ப்பணித்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி பட்ட மனிதர்களில் ஒருவர் தான் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாரதிமோகன்.


ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!




வெளிநாட்டில் இருந்து திரும்பிய சமூக ஆர்வலர்


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பாரதிமோகன். வெளிநாடு சென்றுவிட்டு தாயகம் (இந்தியா) திரும்பியுள்ள இவர், மயிலாடுதுறை சாலைகளில் ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வரும் ஆதரவற்ற முதியவர்களை கண்டு வேதனையடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்த பாரதிமோகன், அவரது பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, ஆதரவர்றவர்களை தேடி உணவு வழங்க தொடங்கினார். 




தேடி தேடி செய்யப்படும் உதவிகள்


யாரும் உறவுகள் இன்றி இருக்கும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை தேடிப் பிடித்து அவர்களுக்கு முடி திருத்தம் செய்து அவர்களை தூய்மைப்படுத்தும் சேவைப் பணியையும் செய்து வருகிறார். கடந்த 2012 -ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் ஆதரவற்ற நபர்களை தூய்மைப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாரதிமோகன், இதுவரை 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார்.




அதுமட்டுமின்றி வீடு இன்றி வாழும் ஏழை எளிய குடும்பங்களை கண்டறிது, பல்வேறு தரப்பினரின் உதவியினை பெற்று அவர்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி கோயம்புத்தூர் கோல்டன் ஹியூமன் பீஸ் பல்கலைக்கழகம் பாரதி மோகனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. 


TN rain alert: அச்சச்சோ..! வங்கக் கடலில் உருவாகிறது புயல், 24 மணி நேர கவுண்டவுன் ஸ்டார்ட்..! வானிலை அறிக்கை சொல்வது என்ன?




சாலையோர ஆதரவற்றோர் 


இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரம் வசிக்கக்கூடிய ஆதரவற்றோருக்கு புத்தாடைகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் சமூக ஆர்வர்கள், பொதுமக்களிடம் நிதி திரட்டியுள்ளார். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் செய்த உதவியின் காரணமாக ஆயிரக்கணக்கான புத்தாடைகளை வாங்கி அதனை மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலையோரம் வசிக்க கூடிய ஆதரவற்றோர் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்களுக்கு புத்தாடைகள், உணவு வழங்கும் பணியை துவங்கியுள்ளார்.




சட்டை, சேலை, வேஷ்டி, கைலி, போர்வை மற்றும் உணவு உள்ளிட்டவற்றை நேரடியாக சென்று சமூக சேவகர் பாரதி மோகன் வழங்கிய நிலையில், மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட புத்தாடைகள் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த சேவையை அப்பகுதி மக்கள் பலரும் மனதார பாராட்டிய வருகின்றனர்.