ABP Southern Rising Summit 2024: ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு, "ஏஜ் கமிங்: அடையாளம், உத்வேகம், தாக்கம்" என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளது.


ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு


தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு, முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இதில் தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட, பல்துறை பிரபலங்கள் பங்கேற்றனர். அரசியல் தொடங்கி தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளம் என, பல்துறை தொடர்பாக கருத்துகள் பரிமாறப்பட்டு மாநாடு வெற்றிகரமாக அரங்கேறியது. அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு வரும் 25ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார்.


சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு 2024:


இந்தியாவின் மக்கள்தொகையில் தோராயமாக 20 சதவிகிதம் பேரை தென்னிந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 31%  மூலம், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பாளராக உள்ளது. மேலும் தென்னிந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2030 ஆம் ஆண்டுக்குள் 35% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் தொடர்ந்து சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவற்றில்,  வடமாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகின்றன.  குறிப்பாக, இந்த மாநிலங்கள் ஜனநாயகம் மற்றும் பிராந்திய தேவைகளுக்கான ஆய்வகங்களாகவும் செயல்படுகின்றன.


தரவு விஞ்ஞானி ஆர்.எஸ்.நீலகண்டன் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் தென்னிந்தியாவில் பிறக்கும் குழந்தையை போன்று இருப்பதற்கான வாய்ப்பு வட இந்தியாவில் மிகவும் குறைவு. தென்னிந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது இதற்கு காரணமாகும். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால், குழந்தை தனது வாழ்க்கையின் முதல் வருடத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புகள் அதிகம், பிரசவத்தின்போது தாய் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இங்கு குழந்தைகளுக்கான சேவைகள் மற்றும் குழந்தை பருவத்தில் சிறந்த ஊட்டச்சத்து கிடைக்கிறது.


தென்னிந்தியத் திரைப்படத் தொழில்கள் உலக அரங்கில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. வணிகத்தில், தெற்கில் இருந்து வந்த மேலாளர்கள் சர்வதேச அளவில் சிறந்த நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அவற்றின் வேர்களுடன் வலுவாக பிணைக்கப்பட்ட தென் மாநிலங்கள் என்றென்றும் வெளிநோக்கிச் செல்கின்றன.


மத்திய அரசில் ஒரு புதிய அரசியல் சமநிலை, இரண்டு புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்கள், புத்துயிர் பெற்ற தலைநகரம் மற்றும் பிராந்திய அடையாளங்களின் மறுஉருவாக்கத்துடன், தென்னிந்தியா எப்போதுமே புதிய வரையறைகளை உருவாக்குகிறது. இப்பகுதியானது பொருளாதார வளர்ச்சி, கலாச்சார பன்முகத்தன்மை, சமூக ஒற்றுமை, கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடு செய்யப்பட்ட புதுமையான நிர்வாக மாதிரிகளை வழங்குவது ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து இந்தியாவை முன்னின்று வழிநடத்தி வருகிறது.


இந்த நிலையில் ஏபிபி நெட்வர்க்கின் 'தி சதர்ன் ரைசிங் உச்சிமாநாடு' இந்த முறை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இது லட்சியம் மற்றும் ஆசைகளின் அடையாளமாகும். உச்சிமாநாட்டின் இரண்டாவது எடிஷன், "ஏஜ் கமிங்: அடையாளம், உத்வேகம், தாக்கம்" என்ற கருப்பொருளில் , தென் மாநிலங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைக் கொண்டாட உள்ளது.


அக்டோபர் 25, 2024 அன்று, ஐதராபாத்தில் நடைபெற உள்ள 'தி சதர்ன் ரைசிங் உச்சிமாநாடு 2024' இல், புதிய தென்னிந்தியாவின் மாற்றத்தை உருவாக்குபவர்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையாளர்களுடன் இணைந்து , ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பிராந்தியத்தின் மாற்றத்திற்கான பயணம் குறித்து அறியுங்கள். மாநாட்டின் நேரலையை ஏபிபி நாடு யூடியூப் சேனலில் வாசகர்கள் கண்டுகளிக்கலாம்.