NEET Result 2024: நீட் குளறுபடிகள்; எழும் சந்தேகம்- தேர்வையே ரத்துசெய்ய ஈபிஎஸ் வலியுறுத்தல்

நீட் தேர்வு முடிவுகள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவசர அவசரமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று வெளியானது மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில், நீட் தேர்விற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தேர்வு மையங்களில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு ஏற்ப கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக கூறும் நிலையில், இதுகுறித்து நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமையின் விளக்கமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை.

பல்வேறு நிலைகளில் முறைகேடு

இதுபோக, வட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதற்கிடையே, ஜூன் 14ஆம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவசர அவசரமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று வெளியானதில் கூட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இக்குளறுபடிகள் குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நீட் தேர்வு குறித்த பல்வேறு காரணங்களாலும், இதுபோன்ற நடைமுறை குளறுபடிகளும், அஇஅதிமுக தொடர்ச்சியாக கொண்டுள்ள நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதிபடுத்துகிறது .

நீட் தேர்வை ரத்து செய்க

இந்த ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கவும், மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவன செய்யவும் புதிதாக அமையவுள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்து வருகின்றனர். குறிப்பாக நீட் மதிப்பெண் குளறுபடிகள் வெளிவருவதாக எழும் மாணவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பயனற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக குறிப்பாக எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வ் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை வாசிக்கத் தவறாதீர்கள்: NEET UG Result 2024: நீட் தேர்வு முடிவில் குளறுபடி? வெளிச்சத்துக்கு வரும் முறைகேடுகள்? விளக்கம் அளிக்குமா என்டிஏ? 

Continues below advertisement
Sponsored Links by Taboola