அடுத்து அடுத்து 4 பேரை கடித்து குதறிய தெருநாய் - அச்சத்தில் சீர்காழி மக்கள்

சீர்காழியில் நான்கு பேரை தெருநாய் கடித்து குதறி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சீர்காழியில் தெருநாய் கடித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

அதிகரித்துள்ள தெருநாய்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் தெவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் சீர்காழி ஈசானி தெருவை சேர்ந்த 75 வயதான அகோரம் 75 என்பவர் சீர்காழியில் உள்ள பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பூ கடையின் வாசலில் நின்று வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த அகோரத்தை அவ்வாழியாக  வந்த வெறி நாய் ஒன்று பலமாக கடித்து குதறியுள்ளது. 

நான்கு பேரை கடித்த ஒரே நாய்

இதே போல சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த இரண்டு மாணவர்கள் வீட்டின் அருகில் உள்ள பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அவர்களை வெறி நாய் கடித்துள்ளது. இதே போல பங்களா தோப்பு தெருவை சேர்ந்த 28 வயதான மிதுன் பிரசன்னா என்பவர் சாலை ஓரம் நின்று பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த வெறிநாய் அவரையும் கடித்து உள்ளது, அடுத்தடுத்து நான்கு பேரை நாய் கடித்தை அடுத்து  கடிப்பட்ட நான்கு பேரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சூழலில் நான்கு பேரையும் கடித்தது ஒரே நாய் என்பது போலீசார் விசாரணை தெரிய வந்துள்ளது. 


அலட்சியம் காட்டும் நகராட்சி 

சீர்காழி நகராட்சி பகுதியில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றி வருவதால் தெருவாசிகள் அன்றாட தேவைகளுக்கு செல்ல முடியாமல், விடுமுறை கொண்டாடி வரும் சிறுவர்கள் தெருக்களில் விளையாட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் முட்டி சிறுவர்கள் காயமுற்ற நிலையில் தற்போது நாய் கடிக்கு ஆளாகும் சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. மாடுகள் முட்டிய பின் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, நாய்கள் கடித்து பின் புகார் வந்த பின் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சீர்காழி நகராட்சி நிர்வாகம் விரைந்து நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக சீர்காழி தாலுக்காவில் நாய் கடி சம்பவம் அதிகரித்து அதனால் பலர் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தொடரும் நாய்கடி சம்பவங்கள் 

சமீப காலமாக நாய்கடித்ததாக செய்திகள் பரவலாக வந்தவண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமியர் அதிகளவில் இந்த நாய்கடிக்கு ஆளாகுவதும், அதற்கு தெருநாய்கள் மற்றும் இன்றி வீடுகளில் வளர்க்கப்படும் பல்வேறு இன நாய்களும் கடிப்பதில் விதிவிலக்கு இன்றி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். தற்போது கூட இந்த செய்தியினை படித்துக்கொண்டிருக்கும்போது கூட தமிழ்நாட்டில் ஏதோ ஒரு இடத்தில் யாரோ ஒரு குழந்தைகள், முதியவரைகள், பாதசாரிகள், சைக்களில், பைக் என சென்று கொண்டிருப்பவரை தெரு நாய் ஒன்று துரத்திக் கொண்டிருக்கும். 


நாய்கடியில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு 

சா்வதேச அளவில் இந்தியாவும், இந்திய அளவில் தமிழகமும் தெரு நாய்களின் எண்ணிக்கையிலும், விஷக்கடியிலும் முதன்மை வகிக்கின்ளது. உலக வல்லரசாக வேண்டும் என்கிற கனவில் மிதக்கும் ஒரு தேசம், கட்டுப்பாடில்லாமல் வீதிகளில் தெரு நாய்கள் திரியும் தேசமாக இருக்க முடியாது, கூடாது. கணக்கில் அடங்காத அளவிலான தெரு நாய்களின் தேசமாக இந்தியா மாறியிருக்கிறது. விஞ்ஞான ரீதியான அணுகுமுறை இல்லாமல் இதற்கு விடை காண்பது எளிதல்ல. உலக சுகாதார நிறுவனத்தின் உத்தேசப்படி, இந்தியாவில் ஆறு கோடிக்கும் அதிகமான தெரு நாய்கள் காணப்படுகின்றன. உலகில் நிகழும் ‘ரேபீஸ்’ எனப்படும் வெறிநாய்க் கடி உயிரிழப்பில் 36 சதவீதம் இந்தியாவில் நிகழ்கின்றன. அதைவிட வேதனையான விஷயம், வெறிநாய்க் கடியால் உயிரிழப்பவா்களில் 30 இருந்து - 60 சதவீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகும். சென்னை போன்ற பெருநகர மாநகராட்சிகளில் நாள்தோறும் குறைந்தது 30 பேராவது நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர்.  


கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் வேண்டும் 

மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்திருக்கும் புள்ளிவிவரத்தின் படி, தமிழ்நாடில் மட்டும் தெரு நாய்க்கடியால் இந்தாண்டு 4.4 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 27.59 லட்சம் போ் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். முறையான தடுப்பூசி, கருத்தடை, தத்தெடுக்கும் வசதி, குட்டிகளை தெருவில் விடுவதற்குத் தடை போன்றவற்றின் மூலம் தெரு நாய் பிரச்னையை எதிா்கொள்ள முடியும். அதற்கு முனைப்பும், தீவிரமான நடவடிக்கையும் அவசியம். ஒருசில நாய்களுக்கு தடுப்பூசி போடுவதாலும், கருத்தடை செய்வதாலும் பிரச்னைக்குத் தீா்வு காண முடியாது. தெருவோரக் கடைகளும், முறையாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதும் தொடரும் வரை நாய்க்கடி பிரச்னையும் தொடரும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola