பணிச்சுமை் மயிலாடுதுறையில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாணவி ஒருவர் பாடிய பாடல் ஆட்சியரை வெகுவாக கவர்ந்துள்ளது. என்னதான் உயர் பதவியில் இருந்தாலும் அந்தந்த இடத்திற்கு ஏற்ற மாதிரியான பல்வேறு வகையான அழுத்தங்கள் காரணமாக மன உளைச்சல்களுக்கும், மன அழுத்தத்திற்கு மனிதர்கள் ஆளாகுவது இருந்து வருகிறது. இதனைப் போக்க உடற்பயிற்சி யோகா பாடல்கள் கேட்பது என பல்வேறு விதங்களில் தங்களின் மன அழுத்தத்தை குறைத்துக்கொள்கின்றனர். வேலை பளு மன அழுத்தம் என்பது கீழ்மட்ட  பணியாளர்கள் முதல் ஆட்சியர் வரை என இதற்கு எவரும் விதிவிலக்கு அல்ல.


10ஆம் வகுப்பில் இந்த மாணவர்களுக்கு மட்டும் தமிழ் மொழித் தேர்வு எழுதுவதில் விலக்கு: அரசாணை வெளியீடு- விவரம்




மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு;


இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டியில் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 11 பள்ளி மாணவ , மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். மேலும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது மாநில அளவில் பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவி மேடையில் பாடல் பாடி அசத்தினார். மேலும் கற்பூர பொம்மை ஒன்று எனத் தொடங்கும் பாடலை மாணவி பாடிய நிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் அங்கிருந்த மாணவர்கள் மெய்மறந்து உருகி கேட்கத் தொடங்கினர்.


Post Office Scheme: வீட்டிலிருந்தே ரூ.1.11 லட்சம் சம்பாதிக்கலாம் - கணவன் - மனைவிக்கான போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்பு திட்டம்






மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் பேச்சு;


பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு வேலைகள் இருக்கும் நிலையில் என்னென்ன பிரச்சனைகள் எப்படி வரும் என தங்களுக்கு தெரியும், தான் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு வேலை பளு காரணமாக ஒரு வித மன இறுக்கத்தில் வந்தேன். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவியின் பாடலைக் கேட்டவுடன் முழுமையாக தான் ரிலாக்ஸ் ஆகிவிட்டேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் மிகவும் ஏழ்மையான வகுப்பில் கிராமப்புறத்தில் இருந்து வந்து சிறப்பாக பாடல் பாடிய சிறுமியை பார்க்கும்போது மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். படிப்பு மட்டும் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்காது, அதை தாண்டி மற்ற கலைகளையும் கற்றுக்கொண்டால் தான் சமுதாயத்தில் ஜெயிக்க முடியும் என அறிவுரை வழங்கினார்.


TVK Vijay: விஜய் கட்சியில் இணைந்த நடிகர் சங்க தலைவர் குடும்பத்தின் முக்கிய நபர்! யார் தெரியுமா?