சீர்காழி அருகே நான்கு வயது மகனின் கண்முன்னே குளத்தில் தவறி விழுந்து தாய் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆதரவற்ற பெண்மணி 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பச்ச பெருமாநல்லூர் ஊராட்சியை மத்தளமடையான் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்பவரது மகள் 34 வயதான சுதா. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் கணவனால் கைவிடப்பட்டு தனது சொந்த ஊரிலேயே பிறந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார். தாய் தந்தையர் உயிரிழந்த நிலையில் நான்கு வயது தனது மகனுடன் ஆதரவின்றி தனியாக வசித்து வருகிறார்.


Economic Survey 2025: GDP வளர்ச்சி 6.3 - 6.8% ஆக இருக்கும் - பொருளாதார ஆய்வறிக்கை விவரம்!



மகன் கண்முன்னே நீரில் மூழ்கிய தாய், காப்பாற்ற துடியாய் துடித்த மகன் - சீர்காழி அருகே சோகம்


குளத்தில் தவறி விழுந்த தாய்


இந்நிலையில் இன்று தனது மகனுடன் குளிப்பதற்காக அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் வழுக்கி விழுந்து தண்ணீர் மூழ்கியுள்ளார். இதனை கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த மகன் அம்மா குளத்தில் மூழ்கியது குறித்து ஓடி சென்று கிராம மக்களின் தெரிவித்துள்ளார். 


ஆசிரியர்களின் 15 கோரிக்கைகளையும் நிறைவேற்ற 15 நிமிடம் போதும்; மனம்தான் இல்லை- திமுக அரசைச் சாடும் ராமதாஸ்!




உடலை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்


அதனை அடுத்து குளத்திற்கு சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து விட்டு குளத்தில் இறங்கி தேடி உள்ளனர். மேலும் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி சுபாவின் உடலை சடலமாக மீட்டனர். இது குறித்து புதுப்பட்டிணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் மகனை ஆதரவற்ற நிலையில் விட்டுச்சென்ற சுபாவின் இறப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாவை எப்படியும் காப்பாற்றிவிட முடியும் என நம்பி முயற்சி செய்த அந்த நான்கு வயது மகனின் செயல் பலனளிக்கவில்லையே என அருகில் இருந்தவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.