இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 -2025 ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உள்நாட்டு பொருளாதாரம் நிலையாக இருப்பது, வேலைவாய்ப்பின்மை ரேட் குறைந்துள்ளது ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் மற்றும் அவரது குழுவினர் பொருளாதார ஆய்வறிக்கையை தயாரித்தார்.
நாட்டின் வளர்ச்சி 2026
2025-26-ம் நிதியாண்டிற்கான இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார நிலையில் அசாதாராண சூழல் நிலவினாலும் இந்தியாவின் வளர்ச்சி சீராக இருப்பதாகவும் தொடர்ந்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயம் & விவசாயிகளுக்கான முன்னெடுப்புகள்:
விவசாய துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1.6 லட்சம் முதல் 2 லட்சம் வரை 'Collateral-free கடன் வழங்கும் திட்டம். சிறு மற்றும் நடுத்தர வர்க்க விவசாயிகள் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கிஷான் கிரெடிட் கார்ட் திட்டங்கள் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கிராம புறங்களில் உள்ள விவசாயிகள், மினவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கிறது.
விவசாய துறையில் நீடித்த வளர்ச்சியை ஊக்குப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வங்கி துறை:
பொருளாதார ஆய்வறிக்கையில் வங்கித் துறைகளின் செயல்பாடு சீராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Gross non-performing assets 12 ஆண்டுகளில் இல்லதா அளவு 2.6 சதவீதம் சரிந்துள்ளது.
பங்குச்சந்தை
உலக அளவில் பொருளாதார அசாதாரண நிலை, அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகிய சூழலிலும் இந்திய பங்குச்சந்தை வரலாற்று உச்சம் தொட்டு சாதனை படைத்தது. இஞ்சுரஸ் மற்றும் பென்சன் துறைகள் சீரான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கையின் முழு விவரத்தை காண..
https://feeds.abplive.com/testfeeds/Hindi/PdfFiles/9239c8410ba9308234e1bc8100ff8fb1.pdf/amp