மயிலாடுதுறையில் நடைபெற்ற ஓவியப்போட்டி மற்றும் ஓவிய கண்காட்சி 350 மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் இருதயராஜ் என்பவர் எல்லோரா பைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் ஓவிய பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இந்த பயிற்சி கூடத்தில் ஆண்டுதோறும் கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டிகள் நடத்தி பரிசுகளையும் வழங்கி வருகிறார்.  அதனைத் தொடர்ந்து 12 -ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி மற்றும் ஓவிய கண்காட்சி  மயிலாடுதுறையில் நடைபெற்றது.


Prashanth: GOAT தந்த உற்சாகம்! அடுத்தடுத்த படங்களில் கமிட்! மிரட்டலான கம்பேக் தருவாரா பிரசாந்த்?




பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே தனித்தனியே நடைபெற்ற இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து 350 க்கும் மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களின் ஓவியம் வரையும் திறனை வெளிப்படுத்தினர்.  பென்சில் ஓவியம், வாட்டர் கலர், அக்ரிலிக் பெயிண்ட், கேன்வாஸ் பெயிண்ட், நவீன ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, இயற்கை எழில் வண்ணங்கள், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பூமி வெப்பமடைதல் விளைவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வண்ணமயமான ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களை அசத்தினர். 


Prashanth: GOAT தந்த உற்சாகம்! அடுத்தடுத்த படங்களில் கமிட்! மிரட்டலான கம்பேக் தருவாரா பிரசாந்த்?




மேலும், வித விதமான வண்ண ஓவியங்கள் ஓவிய கண்காட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இவை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


Largest Cruise Ship: உலகின் மிகப்பெரிய உல்லாசக் கப்பல் இதுதானாம்..! உள்ளே என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?