மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்டு இறுதி சடங்கு செய்து தகனம் செய்யப்பட்டவர் மீண்டும் உயிரோடு வந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் காவல்துறையினருக்கு தலைவலியும் ஏற்படுத்தியுள்ளது.


காவிரி ஆற்றில் மிதந்த உடல்


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி பகுதியில் கடந்த 22 -ஆம் தேதி அடையாளம் தெரியாத வகையில் ஆண் ஒருவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்துள்ளார். அதனை பார்த்த பொதுமக்கள் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஒர் ஆண் சடலம் மிதப்பதாக செம்பனார் கோயில் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த செம்பனார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் மிதந்த உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.


Toxic: டாக்சிக் யஷ்! நாளை மறுநாள் முக்கிய அப்டேட் தரும் ராக்கி பாய் - ரெடியா இருங்க




தகனம் செய்யப்பட்ட நபர் மீண்டும் வந்த அதிசயம் 


ஆற்றில் மூழ்கி இறந்தது மருதூர் லட்சுமி நாராயணபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் 62 வயதான என யூகித்த காவல்துறையினர். செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் செல்வராஜின் மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு செல்வராஜ் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதி காரியங்களுக்கு பிறகு செல்வராஜின் உடலை குடும்பத்தினர் தகனம் செய்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரிடமும் கூறாமல் வெளியூர் சென்றிருந்த இறந்ததாக சொல்லப்பட்ட செல்வராஜ் மருதூர் கிராமத்திற்கு வந்துள்ளார். செல்வராஜ் உயிரோடு வந்து நின்றதை கண்ட கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் செல்வராஜ் என்று கருதி அடையாளம் தெரியாத நபரின் உடலை தகனம் செய்தது தெரிய வந்துள்ளது. 


Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?


உயிருடன் வந்த செல்வராஜ் கூறியது


இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில்; தனது மனைவி சாந்தி மகன் மற்றும் மகள்கள் மாந்தை கிராமத்தில் தற்போது வசித்துவருகின்றனர். நான் சொந்த ஊரான மருதூர் பகுதிக்கு வந்துவிட்டு சில நாட்களில் திருப்பூரில் உள்ள தனது முதலாளியை பார்க்க சென்று அங்கே வேலை செய்தேன், தற்போது மீண்டும் ஊருக்கு வந்தபோது தன்னை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.


ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!




30 -க்கு படைத்த சரக்கு எங்கே?


தான் இறந்து விட்டதாக ஆற்றில் மிதந்து வந்த உடலை பெற்று குடும்பத்தினர் தகனம் செய்துள்ளனர் என்றும் கூறிய செல்வராஜ் தனது குடும்பத்தினரிடம் 30 படைத்துவிட்டீர்களா? சரக்கு வைத்து படைத்திருப்பீர்கள் எங்கே சரக்கு என்று கேட்டதாகவும் சிரித்துகொண்டே கூறிய செல்வராஜ் நான் 100 வயதில் சாவேன் எனக்கு இப்போது சாவு இல்லை என்று தெரிவித்தார். உயிருடன் உள்ள நபர் இறந்துவிட்டதாக கருதி யார் என்று தெரியாத உடல் தகனம் செய்யப்பட்டதால் இச்சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Vishal: "எப்படி இருந்த மனுஷன்.. இப்படி ஆகிட்டாரே? "விஷாலைப் பார்த்து பரிதாபப்படும் ரசிகர்கள்