சீர்காழி அருகே மூத்த இயற்கை விவசாயின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த சக விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த ஆலோசனையில் விவசாயிகள் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி சிவப்பிரகாசம் கலந்துகொண்டார். அவருக்கு தற்போது 100வது வயது முடிந்து 101வது வயது தொடங்கியுள்ளது. இதனை விவசாயிகள் ஒன்று கூடி கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
101 வயதை எட்டிய இயற்கை விவசாயி
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் தூரித உணவுகள், இயற்கைக்கு மாறான உணவு பழக்க வழக்கங்கள் என உண்ணும் உணவே விஷமாக மாறி 30 வயதை கடந்து செல்வதே பெரிய காரியமாக உள்ளது. அதுவும் கொரோனாவை கடந்து மீண்டு வந்ததையே கடவுள் கொடுத்த பெரிய வரப்பிரசாதம் என என்னும் அளவிற்கு மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த முதியவர் சிவப்பிரகாசம் இயற்கையை கடைபிடித்து 101 வயதை எட்டியுள்ளார்.
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
பாராம்பரிய விவசாய குடும்பம்
முதியவர் சிவப்பிரகாசம் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அதனால் தனது இளம் பருவம் முதலே விவசாயத்தையே பிரதான தொழிலாக முன்னெடுத்து இதனால் வரை செய்து வருகிறார். சிவபிரகாசம் தன் வாழ்கை மட்டும் இயற்கையை முறையை கடந்து செல்லாமல் விளைநிலங்களுக்கும் இயற்கையான முறையில் உரங்களையும் செய்து விவசாயம் வருகிறார். மேலும் செயற்கையை நோக்கி சென்றால் அழிவு என்பதை அனைவரிடத்தும் ஆழமாக விவரித்து வருகிறார்.
விவசாயிகளுக்கு வழிகாட்டி
சிவப்பிரகாசம் இன்றளவும் விவசாயத்தை தன் முழு மூச்சாக இயற்கையாக செய்து மேற்கொண்டு உள்ளார். தற்போது சிவபிரகாசம் கொள்ளிடம் ஒன்றிய விவசாய சங்க தலைவராகவும் இருந்து அனைத்து விவசாயிகளுக்கும் வழிகாட்டியாகவும் இந்த வயதில் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒன்று சேர்ந்து சிவப்பிரகாசத்தின் 101 வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இயற்கை விவசாயி சிவப்பிரகாசத்திற்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.