சீர்காழியில் மழையால் மரக்கிளை முறிந்து விழுந்து வீட்டின் சுவர் இடிந்ததில் தூங்கிக் கொண்டிருந்த மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழகத்தில் மழை


தமிழகத்தில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்கள் என்று இல்லாமல் மாநிலம் முழுக்க பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாகவே நல்ல அவ்வப்போது மழை அல்லது இரவு வேளைகளில் மழையானது பெய்து வருகிறது.


எத்தனை கோடிகள் ஒதுக்கீடு செய்து என்ன பலன்? - பள்ளி கட்டிடத்தை பேட்ச் ஒர்க் செய்து ஒட்டி வரும் அரசு - ஆபத்தில் மாணவர்கள்...!




முறிந்து விழுந்த மரம்


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்றிரவு விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்தது. பலத்த மழையின் காரணமாக சீர்காழி நகரில் அமைந்துள்ள குமர கோயில் தெருவில் உள்ள அரச மரத்தின் கிளைகள் இன்று அதிகாலை முறிந்து அருகில் இருந்த நாராயணமூர்த்தி என்பவர் வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டினுள்  தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது. 


'பேசுவது இந்தி படிப்பது தமிழ்' - செங்கல் சூளையில் இருந்த பிள்ளைகள் கையில் தமிழ் புத்தகங்களை கொடுத்த அரசு அதிகாரிகள்




மூன்று பேர் படுகாயம் 


இதில் நாராயண மூர்த்தியின் மனைவி 50 வயதான வாசுகி, மகள் 18 வயதான காயத்ரி மற்றும் அவர்களது உறவினரான 65 வயதான சகுந்தலா ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Rowdy Durai : “எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துரையின் காதலி கைது” எதற்காக தெரியுமா..?




காவல்துறையினர் விசாரணை 


இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சீர்காழி காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதே பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரத்தின் கிளை உடைந்து விழுந்ததில் அருகில் இருந்த மூன்று வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.


TNEA Students Data Leak: அதிர்ச்சி… பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1 லட்சம் மாணவர்களின் விவரங்கள் கசிவு- பின்னணி என்ன?