தரங்கம்பாடி அருகே கடலோர மக்கள் பயன்பெறும் வகையில் புதிய அரசு பேருந்து வசதியை ஏற்படுத்தி பேருந்தை தொடக்க நிகழ்வில் 20 கிலோமீட்டர் தூரம் பேருந்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் ஓட்டி சென்றார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையார் பகுதியில் இருந்து சின்னங்குடி வழிதடத்தில் சீர்காழி வரை பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். 


LIC Movie: LIC பட ஷூட்டிங்கில் வேலையை காட்டிய நிஃபியா பர்னிச்சர் சிறுவன்.. வைரலாகும் வீடியோ!




அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவ்வழி தடத்தில் புதிய அரசு பேருந்து சேவை இன்று துவங்கப்பட்டது. தொடர்ந்து கடலோர மக்கள் இப்பகுதிகளில் அதிக அளவில் வசிப்பதால், அவர்கள் பயன்பெறும் வகையில் இந்த புதிய அரசு பேருந்தினை திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா. முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 


Poonam Pandey Death: புற்றுநோயால் உயிரிழப்பு என தகவல்.. வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே




பின்னர் தரங்கம்பாடி, மாணிக்கபங்கு, வானகிரி, தர்மகுளம் வழியாக கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்தினை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா. முருகன் ஓட்டிச் சென்றார். மேலும் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் பொதுமக்கள் ஒவ்வொரு வழித்தடத்திலும் பேருந்துக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதை அடுத்து பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Aavin Recruitment: ரூ.43,000 சம்பளத்தில் வேலை! வரும் 13-ஆம் தேதி நேர்காணல் - எங்கே? எப்போது?