புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை பூனம் பாண்டே உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். 


உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே.


தொடர்ந்து 2013ஆம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான பூனம், அதன் பிறகு தனக்கென தனியாக இணையதளம் தொடங்கி அதில் அரை நிர்வாணப் புகைப்படங்களைப் பதிவிட்டு விமர்சனங்களை சந்தித்து வந்தார். மேலும் தன் சமூக வலைதளப் பக்கத்திலும் ரசிகர்களுடன் உரையாடியும், புகைப்படங்கள் பகிர்ந்தும் ஆக்டிவ்வாக வலம் வந்தார்.


சர்ச்சைக்குரிய நடிகையாக பாலிவுட் உலகில் வலம் வந்த பூனம் பாண்டே, இன்று உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்ப்பை வாய் புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது குறித்து பதிவிடப்பட்டது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.


 






பாலிவுட் தவிர “லவ் இஸ் பாய்சன்” எனும் கன்னட படத்திலும், “மாலினி அண்ட் கோ” எனும் தெலுங்கு படத்திலும் பூனம் பாண்டே நடித்துள்ளார். மேலும் லாக் அப் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பூனம் பாண்டே நடித்துள்ளார். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்றும் அவர் சொன்னபடி செய்யாததாக அப்போது இணையவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.


இந்நிலையில் ”தனக்கு அப்போது 18 வயது தான், கிரிக்கெட் பற்றியோ, கிரிக்கெட் வீரர்கள் பெயர் பற்றியோ எதுவும் தெரியாது, இந்தியாவை அதிர வைக்கும்  வகையில் அறிக்கை விட எண்ணியே அவ்வாறு செய்தேன்” என சென்ற ஆண்டு விளக்கமளித்திருந்தார்.


கடந்த 2020ஆம் ஆண்டு தன் காதலர் சாம் பாம்பேவை பூனம் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரு மாதத்திலேயே தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், குடும்ப வன்முறை செய்ததாகவும் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது.


இந்நிலையில் பூனம் பாண்டே தன் 32ஆவது வயதில் கர்ப்பை வாய் புற்றுநோய் காரணமான நேற்று காலை உயிரிழந்ததாக அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்டது. ஆனால் விழிப்புணர்வுக்காக அப்படி பதிவிட்டதாக பூனம் பாண்டே இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். 


மேலும் படிக்க: Ajith: நான் கடவுள் முதல் நந்தா வரை! அஜித் 'நோ' சொல்லி சூப்பர் ஹிட் அடித்த படங்களின் பட்டியல்!


Rajkiran Daughter: என்னை மன்னிச்சுருங்க டாடி: முறிந்தது காதல் வாழ்க்கை: ராஜ்கிரண் வளர்ப்பு மகள் வெளியிட்ட வீடியோ