மத்திய, மாநில அரசுகளின் வணிக விரோத போக்கை கண்டிப்பதாகவும், கடைகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்பப்பெற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் இன்று அரைநாள் கடைஅடைப்பு செய்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


வரி விதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு 


மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கடந்த மாதம் 10-ந் தேதி முதல், வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வணிகர்கள், ஆண்டுக்கு ரூ.1½ கோடி வரை வியாபாரம் செய்யும் வணிகர்கள், தயாரிப்பாளர்கள், ஓட்டல் மற்றும் வரி விலக்கு உள்ள பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த தீர்மானத்துக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


Year Ender 2024 : தோனியின் வைட் பால் முதல் கோலியின் நோ பால் வரை.. ஐபிஎல் 2024ல் நடந்த சர்ச்சைகள்




மயிலாடுதுறையில் கடையடைப்பு போராட்டம்


இதற்கு நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசின் கடைகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்பப்பெற வேண்டும், உள்நாட்டு வணிகத்தை சுரண்டும் ஆன்லைன் வணிகத்தை தடைசெய்ய வேண்டும், மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவிகித கூடுதல் சொத்துவரி விதிப்பை திரும்பப்பபெற வேண்டும், வணிக உரிம கட்டணம் உயர்வு, தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவிக்க வேண்டும், மாதாந்திர மின்கட்டண அமலாக்கம் நடைமுறைப்படுத்த வேண்டும், வணிக உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறையை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Top 5 Actress 2024: 2024 - திறமையான நடிப்பால் ரசிகர்களை அசரவைத்த டாப் 5 ஹீரோயின்கள்!




ஆட்சியரிடம் மனு


மயிலாடுதுறை நகரில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை கடைகளை அடைத்த வணிகர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து, கொட்டும் மழையில் நனைந்தவாறு விஜயா திரையரங்கம் சாலையில் திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தங்க கோரிக்கை மனுவினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் நேரில் வழங்கினர்.