மயிலாடுதுறையில் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத்தைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் கடந்த 35 ஆண்டுகளாக சுமார் 400 லாரிகள் இயங்கி வருகின்றன. இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை எடமணல், மாணிக்கபங்கு ஆகிய இடங்களில் உள்ள கிடங்குக்கு லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கம். 


ICC Test Batting Ranking: ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை...ஹிட்மேன் ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிய ஜெய்ஸ்வால்!




இந்நிலையில் இக்கிடங்குகளில் லாரியில் மூட்டைகளை ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகளை இறக்கி வைப்பதில் லாரி உரிமையாளர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக தனியார் மில் உரிமையாளர்கள் சொந்த லாரிகளின் மூலம் கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகளை எடுத்து செல்ல அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். இதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த விவகாரத்தில், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினர், தனியார் மில் உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச்செல்ல லாரி உரிமையாளர்களுக்கு நேற்று முன்தினம் முதல் டோக்கன் வழங்கப்படவில்லை. 


Khushbu Sundar: ”ரொம்ப பெருமையா இருக்கு”; சென்னைக்கு குஷ்பு கொடுத்த சர்டிஃபிகேட்; எதுக்குனு தெரியுமா




இதனைக் கண்டித்தும், லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், தனியார் மில் உரிமையாளர்களின் லாரிகள் பயன்படுத்துவதை கைவிடும் வரை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு லாரிகளை அனுப்பாமல் 2 -வது நாளாக சங்கத் தலைவர் சார்லஸ் தலைமையில் நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் சுமார் 7,000 முதல் 10,000 மூட்டைகள் வரை நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 177 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 50,000 மெட்ரிக் டன் நெல் தேக்கம் அடைந்துள்ளது.


Mansoor Ali Khan: நாடாளுமன்ற தேர்தல்.. ஆரணி தொகுதி வேட்பாளராக களமிறங்கும் மன்சூர் அலிகான்!




ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள காரணத்தால் புதிதாக கொள்முதல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களின் போராட்டம் நீடிக்கும்பட்சத்தில் விரைவில் கொள்முதல் செய்வது நிறுத்தப்படும் அபாயம் உள்ளது என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண  நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Theni Lok Sabha Constituency 2024: தேனி தொகுதியில் எந்த கட்சியில் யார் யாருக்கு சீட் ? - விபரம் இதோ