மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதா 5,16,534   வெற்றியை உறுதி செய்துள்ளார். 


மக்களவைத் தேர்தல் 2024:


நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அதனைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகிறது. அதன்படி, மயிலாடுதுறையில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை வேட்பாளர்கள் விவரம்:


கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜூன் 4ம் தேதியான இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி வரை வேட்பு மனுதாக்கல்  30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றநிலையில், 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் தற்போது களத்தில் 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 


மயிலாடுதுறை மக்களவை தொகுதி:


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி), 161 - மயிலாடுதுறை, 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும் 172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. 


வாக்காளர்கள் விவரம்: 


மயிலாடுதுறையில் மொத்தமாக 15,45,558 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள் - 7,59,937, பெண்கள் - 7,85,559, மூன்றாம் பாலினத்தவர்கள் - 72 பேர்கள் உள்ளனர். அதில் மக்களவை தேர்தலில் வாக்களித்தவர்கள் 10,83,243 பேர் மட்டுமே ஆகும். அதில், ஆண்கள் - 5,25,527, பெண்கள் - 5,57,693, மூன்றாம் பாலினத்தவர்கள் - 21 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதன்மூலம், 75.09% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.