குளிச்சாறு வாய்க்கால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா? ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளதா? என்ற குளறுபடியால் வாய்க்கால் தூர்வாராப்படாததால் 300 ஏக்கர்  சம்பா பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


மழை நீர் சூழும் அபாயம் 


மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை காரணமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் நடவு செய்த இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சாறு கிராமத்தில் உள்ள முக்கிய வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது‌.  இதனால் மழைநீர் வடியாமல் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 


Convertible Vehicle: அடடேய்ய்..! ஆட்டோக்குள்ள ஸ்கூட்டர், சர்ஜ் எஸ்32 - உலகின் ஃபர்ஸ்ட் கிளாஸ் கன்வெர்டபள் வாகனம்




எம்எல்ஏ ஆய்வு 


இந்த சூழலில் மழை நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரிடம் மனு அளித்துள்ளனர். அதனை அடுத்து மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார் குளிச்சார் வாய்க்காகலை மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டார். அப்போது அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில்; குளிச்சாறு வாய்க்கால் முறையாக தூர்வாரப்படவில்லை, பல இடங்களில் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சிறிய கன்னிபோல் இருப்பதால் சிறிய மழை பெய்தாலே தண்ணீர் வடிவதற்கு வழியின்றி நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். 


TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு




குழப்பத்தில் அதிகாரிகள் 


அப்போது சட்டமன்ற உறுப்பினருடன் ஒன்றிய ஆணையர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திவாகர், பொதுப்பணித்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது குளிச்சாறு வாய்க்கால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா? ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று அதிகாரிகளிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாய்க்கால் எந்த துறை பராமரிப்பில் இருந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரியாமல் பணியாற்றுவது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விளைநிலங்கள் பாதிப்படைவதால் குளிச்சாறு வாய்க்காலை உடனடியாக தூர்வாரி மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ ராஜகுமார் ஆலோசனைகள் வழங்கினார். 


இவ்வளவு பாரம்பரிய நெல் வகைகளா ? கேட்டாலே ஆச்சரியம் தான்.. தமிழ்நாடு முழுவதும் விதை சப்ளை




விவசாயிகள் கோரிக்கை 


மேலும் இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், குளிச்சாறு கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வயல்களில் பிரதான வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை, இதனால் சிறிய மழைபெய்தாலே நெற்பயிர்களில் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. பொதுப்பணித்துறை தூர்வார வேண்டுமா? ஊராட்சி ஒன்றியம் சார்பில் தூர்வாரப்பட வேண்டுமா என்று அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் பாதிக்கப்படுவது விவசாயிகளில்தான். அது மற்றும் இன்றி உடனடியாக கனமழை பெய்வதற்குள் குளிச்சாறு வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை மற்றும் செடிகளை அகற்றினால் தான் மழைகாலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஆகையால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இது குறித்து போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.