Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (19.11.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 


மின் பராமரிப்பு பணி 


தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை  அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 




மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் செய்தி குறிப்பு 


இதேபோன்று  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் செந்தில்நாதன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கடலங்குடி துணை மின் நிலையம் சேத்திரபாலபுரம், சோழம்பேட்டை, ஆலங்குடி, குத்தாலம், முருகமங்கலம் மின் பாதையில் மின்விநியோகம் பெறும் கடலங்குடி, வானாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிக்குத்தி, முருகமங்கலம் திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஆனதாண்டவபுரம், ஆலங்குடி 


மயிலாடுதுறை நகர் துணை மின் நிலையம்


மயிலாடுதுறை நகர் துணை மின் நிலையம், திருவிழந்தூர், பஜார், மின் பாதையில் மின்விநியோகம் பெறும் திருவிழந்தூர், வடக்கு ராமலிங்க தெரு, சீர்காழி ரோடு, ஆனதாண்டவபுரம் ரோடு, மாருதி நகர், பூம்புகார் ரோடு, மகாதான தெரு, பெரிய கடைத்தெரு, சின்ன கடைத்தெரு, பட்டமங்கல தெரு, நாராயணபிள்ளை சந்து.


மயிலாடுதுறை பேச்சவாடி துணை மின் நிலையம் 


வழுவூர், வடகரை மின் பாதையில் மின் வினியோகம் பெறும் வழுவூர், எலந்தங்குடி, கப்பூர், வடகரை, அன்னவாசல், இளையாளூர், அரங்ககுடி, செறுதியூர், குளிச்சார், மன்னன்பந்தல் தெற்கு.




நீடூர் துணை மின் நிலையம் 


மொழையூர் மின் பாதையில் மின் வினியோகம் பெறும் உட்கடை, கடுவங்குடி, கொற்றவநல்லூர் ஆகிய இடங்களில் நாளை 19.11.2024 செவ்வாய் கிழமை அன்று மின் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேலே குறிப்பிட்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும்  ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்டத்தின் குளறுபடி.


மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்தில் கடந்த சில மாதங்களாக மாதாந்திர மின் பராமரிப்பு பணி என்ற பெயரில் மின்னிருத்தம் செய்யப்பட்டுகிறது. ஆனால் அதற்கான பணிகளான மரக்கிளைகள் அகற்றுதல், மற்றும் மின் பாதையில் உள்ள இடையூறுகளை சரி செய்யும் பணியில் ஈடுபடாமல், மாறாக தனியார்களுக்கு அவர்கள் சார்ந்த மின் பணியினை அன்றை தினத்தில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக அன்றைய தினங்களில்  தனியார் மின் சார்ந்த மின்கம்பங்கள் நடுதல், புதிய டிரான்ஸ்ஃபார்மர்கள் அமைத்தல் போன்ற பணிகளில் அதிகாரிகள் மின்வாரிய ஊழியர்களை பயன்படுத்தி வருதாகவும், இதனால் மின்பாதை பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறாமல் மழை போன்ற பேரிடர் காலங்களில் ஆங்காங்கே மின்கம்பங்கள் மீது மரக்கிளைகள் முடிந்து விடுவதும் பழுந்தடைந்த மின்கம்பங்கள் சாய்ந்து விழுவதும்,




மின்கம்பிகள் வழுதடைந்து அறுந்து விழுவது என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியமான மின் விநியோகம் பல மணி நேரம் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருவதாகவும், அதேபோன்று மின்னழுத்தம் தேதி அறிவித்துவிட்டு பல நேரங்களில் அதனை மாற்றி, மின் நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர் எனவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மயிலாடுதுறை கோட்ட மின்வாரியத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டை தெரிவிக்கின்றன. இதனை வருங்காலங்களில் சரி செய்து, அடிக்கடி மின்நிறுத்த அறிவிப்பு தேதியினை மாற்றாமல் சரியான திட்டமிடலுடன் மின் நிறுத்ததை மேற்கொள்ள வேண்டும், மின் நிறுத்தப்படும் செய்யப்படும் நாளில், தனியார்களுக்கு பணி செய்யாமல், மின்னழுத்தம் செய்யப்பட்ட காரணத்திற்கான பணியினை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.