மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூரை சேர்ந்த சுலைமான் என்பவரது மகள் 28 வயதான ஷிபானா ஜாஸ்மின். திருமணமாகி விவகாரத்து பெற்றவர். பி.இ. சிவில்., படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஷிபானா ஜாஸ்மினுக்கு குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல்அஜீஸ் என்பவரின் மகன் 23 வயதான ஜாகிர் ஹூசைன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.


நகை - பணம் மோசடி 


அதனை தொடர்ந்து ஷிபானா ஜாஸ்மினை ஜாகிர் ஹூசைன் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஷிபானா ஜாஸ்மினிடம் இருந்து பல தவணைகளாக 14 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். ஜாகிர் உசேன் ஆசை வார்த்தைகளை நம்பி நெருங்கி பழகியதை சாதகமாக பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு செய்ததோடு, அதனை தனது செல்போனில் வீடியோ போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு, இந்த சம்பவத்தைப் பற்றி வெளியே சொல்லக் கூடாது. மீறி சொன்னால் உனது ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி பலமுறை பாலியல் வல்லுறவு செய்ததாக கூறப்படுகிறது. 




இளைஞர் மீது பெண் காவல்நிலையத்தில் புகார் 


இதனால் கர்ப்பமடைந்த ஷிபானா ஜாஸ்மினை ஜாஹூர் உசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வாயில் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு மாத்திரைகளை கொட்டி கருவைக் கலைத்து, தன்னை அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு துரத்திவிட்டதாகவும், தன்னை போன்று நிறைய பெண்களை தனது குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் ஜாஹூர் உசேன் ஏமாற்றிவிட்டதாகவும், வெளியில் சொன்னால் தன்னை கொன்று உயிரோடு புதைத்துவிடுவேன் என்று மிரட்டும் செல்போன் ஆடியோவுடன் புகார் மனுவை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழங்கியுள்ளார்.  




இளைஞர் கைது 


இதனையடுத்து போலீசார் ஜாஹிர் ஹூசைனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது நாகூர் தர்காவில் ஷிபானா ஜாஸ்மினை தான் திருமணம் செய்ததாக வீடியோ ஆதாரங்களை குடும்பத்தினர் அளித்துள்ளனர். ஆனால் வலுக்கட்டாயமாக தன்னை கடத்தி சென்று திருமணம் செய்ததாக ஷிபானா ஜாஸ்மின் காவல்துறையில் தெரிவித்துள்ளார். 


மேலும் ஒரு பெண் புகார் 


இந்நிலையில் இந்த தகவல் அறிந்த ஜாஹிர் ஹூசைனால் பாதிக்கப்பட்ட தேரிழந்தூரை சேர்ந்த திருமணமான பெண் சலீமாபீவி (ஷிபானா ஜாஸ்மின் உறவுக்கார பெண்) சகோதரரும் தனது குடும்பத்தினருடன் வந்து ஜாகிர் ஹூசைன் தன் தங்கை சலீமாபீவியை ஏமாற்றிவிட்டதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். சலீமா பீவியின் மாமன் மகன்தான் ஜாகீர் உசேன் என்றும், தன்னை ஏமாற்றி தன் வாழ்க்கையை சீரழித்து நகை வீட்டு பத்திரத்தை பிடுங்கி கொண்டு தன்னை நடுத்தெருவில் கையேந்த விட்டுவிட்டதாகவும் தன்னைப் போல் பல பெண்களை ஜாகீர் உசேன் ஏமாற்றி வருவதால் ஜாகிர் உசேனால் சீரழிந்த பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வீடியோ பதிவிட்டு அனுப்பியுள்ளார்.




ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட காவல்துறையினர்


ஆனால், போலீசார் ஜாகீர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் புகார் அளிக்க வந்த ஷிபானா ஜாஸ்மின் மீதே குற்றம்சாட்டி ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி ஷிபானா ஜாஸ்மினுக்கு ஆதரவாக வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் அனைத்து மகளிர் காவல் நிலையம் வாசலிலேயே போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை டிஎஸ்பி பாலாஜி மற்றும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி டிஎஸ்பி பாலாஜி விசாரணை செய்த நிலையில் போலீசார் ஜாகிர் ஹூசைன் மீது ஐபிசி 318(2), 318(4), 351(2) 75, 69 ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். மேலும் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சட்டத்திற்கு விரோதமாக கூட்டம் கூட்டி பிரச்சனையில் இடுபடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.