காவிரி கடைமடை மாவட்டம் 


காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம். இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். மேலும் காவிரி நீரை மட்டும் இன்றி இங்கு பல பகுதிகளில் நிலத்தடி நீரையும் பயன்படுத்தி சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மின்சார பற்றாக்குறையால் தற்போது இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


MGR Film Institute: எம்ஜிஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை: மே 2 முதல் விண்ணப்பிக்கலாம்: எப்படி?




நிலத்தடி நீரை கொண்டு விவசாயம்


மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மும்முனை மின்சாரத்தை பயன்படுத்தி மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீரைக்கொண்டு சுமார் 90 ஆயிரம் ஏக்கரில் இப்பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். இந்தாண்டு, விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ள நிலையில், விவசாயத்திற்கு 12 மணி நேரம் வழங்கப்பட்டுவந்த மும்முனை மின்சாரம் தற்போது 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் விவசாய பணிகளை தொடர முடியாமல் கடும் அவதி ஆளாகியுள்ளனர்.


Amit Shah: பாஜக எதிர்க்கட்சிகளை அழிக்கிறதா? அரசியலமைப்பை மாற்றுமா? ABPக்கு அமித்ஷா பிரத்யேக பேட்டி




பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் நிறுத்தம் 


மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து, விவசாயிகள் பலமுறை துறை மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் அவர்கள் உரிய நடவடிக்கைகள் எதும் எடுக்கவில்லை. 


TN Heat Wave: மக்களே உஷார்! அதிகமாகும் 5 டிகிரி செல்சியஸ்: 3 நாட்களுக்கு அலெர்ட் கொடுக்கும் வானிலை!


ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் 


இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டும் அவர்களுக்கு உரிய தீர்வு கிட்டவில்லை. இதையடுத்து, மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அன்பழகன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமலிங்கம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு, மாவட்டம் முழுவதும் தடையில்லா மின்சாரம் மற்றும் விவசாயப் பணிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்த ஆப்கானிஸ்தான்.. யார் கேப்டன் தெரியுமா..?




விவசாயிகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை


விவசாயிகளின் இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் கால்டாக்ஸி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை அடுத்து அங்கு விரைந்து வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள், பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் என நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்குவதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.