வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரஷித் கான் தலைமையில், வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி உகாண்டாவுக்கு எதிராக கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. 


அனுபவமிக்க முகமது நபி, ரஹ்மானுல்லா குர்பாஸ் போன்ற வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியில் மேலும் இப்ராஹிம் சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா சத்ரான் மற்றும் முகமது இஷாக் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக களமிறங்குகின்றனர்.


மேலும், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷித் கான் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி மற்றும் ஃபரித் அகமது மாலிக் ஆகியோர் எதிரணியை வீழ்த்த காத்திருக்கின்றனர். இதுதவிர சாதிக் அடல், ஹஸ்ரத்துல்லா ஜசாய், சலீம் சஃபி ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.






டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான்: 


ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா ஜத்ரான், முகமது இஷாக், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹமட், நூர் அஹமட் ஃபாரூக்கி மற்றும் ஃபரித் அகமது மாலிக்


ரிசர்வ் வீரர்கள்:


சாதிக் அடல், ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய் மற்றும் சலீம் சஃபி






டி20 உலகக் கோப்பை ஜூன் 2-ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா மண்ணில் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு முன்பே, இந்தியா, இங்கிலாந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தங்களது 15 பேர் கொண்ட அணி வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளன. டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க மே 1 அதாவது இன்றே கடைசி நாள்.