குத்தாலத்தை அடுத்து திருவலங்காடு பகுதியில் திருமணம், கோயில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சிறிய அளவிலான வெடி தயார் செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று பேர் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்‌.


நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலை 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு மாதா கோயில் மெயின் ரோடு ஆற்றங்கரை பகுதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இங்கு நாட்டு வெடிகள், திருமணம், கோயில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு தேவையான வானவெடிகள்  தயாரிக்கப்பட்டு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இன்னும் இரண்டு மாதங்களில் தீபாவளி பண்டிகை  வருவதை முன்னிட்டு வானவெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுள்ளது.


சீர்காழி அருகே சோகம்.. பேருந்து மோதி 3 இளைஞர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு




திடீர் தீ விபத்து 


20 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் நான்கு பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று நண்பகல் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. வழக்கம்போல் நான்கு தொழிலாளர்கள் பணிக்கு வந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று இன்று நண்பகல் ஒரு மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 


"ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை இலவசமாக பார்க்கலாம்" மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர் உதயநிதி!




ஒருவர் உயிரிழப்பு - மூன்று பேர் படுகாயம் 


இந்த விபத்தில், வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவாவடுதுறையை சேர்ந்த கர்ணன் என்பவர் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கலியபெருமாள், குமார், லட்சுமணன் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம்பத்தினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 


துணை முதல்வர் பதவி.. எதிர்பார்ப்பது எல்லாத்தையும் கொடுக்க முடியுமா? - அமைச்சர் துரைமுருகன்




காவல்துறையினர் விசாரணை 


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குத்தாலம் தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரடியாக பார்வையிட்டு விபத்து குறித்து ஆய்வு செய்தார்.


CM MK Stalin:மீனவர்கள் கைது விவகாரம்: வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!




கடந்த ஆண்டு விபத்து 


இதே போன்று கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடியில் செயல்பட்டு வந்த வெடி குடோனில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்து, மூன்று பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிட்டத்தக்கது.


Anna University Arrear Exam: கடைசி வாய்ப்பு; மிஸ் பண்ணிடாதீங்க- 15 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போர் மீண்டும் தேர்வெழுலாம்- எப்படி?