சமூகநீதியை பாதுகாக்கும் படை தலைவர்களாக பாக முகர்வர்களை பார்க்கிறேன் - அமைச்சர் மெய்யநாதன்

நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் மக்கள் நலனுக்காக  உழைத்து வருகிறார். இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற பாகமுகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி புரிந்தபோது தமிழகத்தின் அனைத்து உரிமைகளை ஒன்றிய அரசிடம் விட்டுக் கொடுத்து விட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். 

Continues below advertisement

பாகமுகவர்கள் கூட்டம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் கொள்ளிடம் கிழக்கு, மேற்கு ஒன்றிய பாகநிலை முகவர்கள் கூட்டம் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா. முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் செல்ல சேது. ரவிக்குமார், மலர் விழிதிருமாவளவன் முன்னிலை வகித்தனர்.  

New Maruti Suzuki Dzire: கம்மி விலை, அட்டகாசமான டிசைன், 25 கிமீ மைலேஜ் - அறிமுகமானது மாருதி சுசூகியின் டிசைர் கார் மாடல்


அமைச்சர் மெய்யநாதன் பேச்சு 

இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் திமுக  கூட்டணி வெற்றி பெற்றது போல், வரும் 2026 சட்டபேரவை தேர்தலிலும் 200 -க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி மாலையை பெற்றுத்தர வேண்டும். அதற்கு கட்சியினர் உழைத்திட வேண்டும். 

National Education Day: யாராலும் பறிக்க முடியா சொத்து- இன்று தேசிய கல்வி தினம்: ஏன், எப்படி கொண்டாடப்படுகிறது?


20 மணிநேரம் உழைக்கும் முதல்வர் 

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் விட்டு தந்து விட்டார். திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வராக மு.க. ஸ்டாலின்  பொறுப்பேற்று சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் மக்கள் நலனுக்காக  உழைத்து வருகிறார். இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

Raja Raja Cholan: தேவர், உடையார்.... ராஜராஜ சோழன் எந்த சாதியை சேர்ந்தவர்..? - வேண்டாம்... வேண்டாம் இது வேண்டாம் அரசே


சிறப்பாக செயல்பட்டு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்

சென்னை கனமழையில் போது இரவு, பகல் பாராமல் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. சமூக நீதியை பாதுகாக்கும் படை தலைவர்களாக பாக முகவர்களை பார்க்கிறேன் என்றார். முன்னதாக சீர்காழி நகரம்,  கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூர் கழக பாக முகவர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் நிவேதா.முருகன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் திமுகவினர் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் கட்சிக்காக உழைக்க வேண்டும் என்றார்.

பள்ளிக்கல்வி துறையில் விரைவில் வரப்போகும் மாற்றங்கள்; சஸ்பென்ஸ் வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

Continues below advertisement
Sponsored Links by Taboola