சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாமல் மருத்துவனை செயல்பட்டதால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். 


சீர்காழி அரசு மருத்துவமனை


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டமாக பிரிக்கப்பட்டது அடுத்து சீர்காழி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை பெயரளவில் மட்டுமே மருத்துவமனையாக செயல்பட்டு வருகின்றது. மேலும் தொடர்ச்சியாக இங்கு மருத்துவர் பற்றாக்குறை நிலவி வருகிறது. 


Archana Patnaik Profile : “2026 தேர்லை நடத்தப்போகும் IAS அதிகாரி” யார் இந்த அர்ச்சனா பட்நாயக்..?




அடுத்தடுத்து எழும் புகார்கள்


மேலும் பல்வேறு பிரச்சினைகளால் அவ்வப்போது செய்திகளில் இந்த மருந்துவமனை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. போதிய மருத்துவர்கள், நவீன கருவிகள் இல்லாதது, மருந்துக் குறைபாடு, சுகாதார குறைபாடு என பிரச்சினைகளுக்கு துளியும் பஞ்சம் இன்றி மருந்துவமனை இயங்கி வருகிறது .


பிரதமர் மோடிக்கு புகழாரம்... கருணாநிதியின் பேரன், முதல்வரின் மகன் உதயநிதிக்கு - மதுரை ஆதினம் என்ன பேசினார்?


சிகிச்சைக்காக வரும் ஏழை மக்கள் 


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவை சுற்றியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த  கிராமப்புற ஏழை மக்கள் ஆயிரக்கணக்கானோர் சீர்காழி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் உள்ள நோயாளியாகவும்,  வெளி போராளியாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் பற்றாக்குறை சூழ்நிலை நிலவி வருகிறது. 


Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!




மருத்துவர்கள் பற்றாக்குறை 


இதனால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் மருத்துவர் அல்லாத அலுவலர்கள் நோயாளிக்கு தாங்கள் மருத்துவர்கள் போல செயல்பட்டு  வரக்கூடியவர்களுக்கு என்னவென்று கேட்டு அவர்களுக்கு மருந்து மாத்திரைகளை சீட்டில் எழுதி கொடுத்து வருகின்றனர். 


Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்


காலியாக இருந்த மருத்துவர்கள் இருக்கை 


இந்த சூழலில் இன்று ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படும் நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் மருத்துவர் இருக்கையில் மருத்துவர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களில் ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது. 


4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்




தீர்வுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் 


மேலும் இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, பொதுமக்கள் அதுவும் ஏழை எளிய மக்களின் உயிரில் விளையாடி ஏதேனும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் போதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Sabarimala: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.... சாமியை தரிசனம் செய்வது எப்படி? - புதிய அறிவிப்பு இதோ