மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிக்காக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரையும் ஒருசில இடங்களில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி மின்வாரிய துறை மூலம் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின்வாரிய செய்தி குறிப்பு
அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் செந்தில்நாதன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் இன்று 05.11.2024 செய்வாய் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை கோட்டம் மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் திருவாரூர் ரோடு, சீனிவாசபுரம், குமாரகட்டளை தெரு, ரேவதி நகர், மீன் மார்க்கெட், திருமஞ்சன வீதி, கூறைநாடு, அறுபத்துமூவர்பேட்டை, பூக்கடை தெரு, அண்ணா வீதி, காவிரி நகர்
பெரம்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பெருஞ்சேரி, கிளியனூர், அகர வல்லம். குத்தாலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்வினையாகும் பெறும் குத்தாலம் டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களிலும் நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.
சீர்காழி மின் கோட்டம்
இதேபோல் சீர்காழி கோட்டத்திலும் இன்று 05-ம் தேதி செவ்வாய்கிழமை அன்று ஆச்சாள்புரம் மற்றும் அரசூர் துணைமின் நிலையங்களில் இருந்து செல்லும் 11KV, தாண்டவன்குளம் மற்றும் 11KV மாதிரவேளூர் உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட இரண்டு உயரழுத்த மின்பாதைகள் வழியாக மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடக்காரமூலை, பழையபாளையம், கொட்டாய்மேடு, தாண்டவன்குளம், எருக்கூர், புத்தூர், சோதியக்குடி, மாதிரவேளூர், சேந்தங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்நிறுத்தம் வாபஸ்
இந்நிலையில் இன்று மின்நிறுத்தம் செய்யப்பட்டுவதாக கூறப்பட்ட திருவெண்காடு, தருமகுளம், வாணகிரி, பூம்புகார், பெருந்தோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டா பகுதிகளிலும் மின்நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று வாணகிரி மீனவர் கிராமத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதை அடுத்து அப்பகுதியில் இன்று நடைபெற இருந்த மின்நிறுத்தம் தேதி குறிப்பிடாமல் மாற்றப்பட்டுள்ளது.