2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என ஜெயலலிதா பேரவை சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை செய்து சீர்காழி சட்டநாதர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டனர். 

Continues below advertisement

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாள் நேற்று (பிப்ரவரி. 24) அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது அவரது தீவிர விசுவாசிகளாலும் கொண்டாடப்பட்டது. மைசூருவின் மாண்டியாவில் 1948 -ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று பிறந்த ஜெயலலிதா, அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான நடிகர் எம்.ஜி.ஆருக்கு பின் அதிமுக பொதுச்செயலராக இருந்து தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாகக் கோலோச்சியவர்.

ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்... இப்படி ஒரு 'ஜெ' விசுவாசியா...!

Continues below advertisement

பல்வேறு தரப்பினர் கொண்டாட்டம் 

இந்நிலையில், ஜெயலலிதாவின் 77- வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். பிப்ரவரி 24 -ம் தேதி மட்டும் இன்றி மற்ற நாட்களில் அதன் கொண்டாட்டம் என்பது தொடர்ந்து வருகிறது. அதிமுக கட்சி நிர்வாகிகள், அதிமுக உரிமை மீட்பு குழு மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முன்னதாக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அங்கன்வாடி சென்ற 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்... சீர்காழியில் பகீர் சம்பவம்

விளக்கு பூஜை செய்து வழிபாடு 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒன்றாக பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சீர்காழி சட்டநாதர் கோயிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேரவை சார்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை வழிபாடு மேற்கொண்டனர். 

Gold Rate Peaks: ஐயோ..போச்சே... வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை...

2026 -ல் ஆட்சி அமைக்க வேண்டுதல் 

வருகிற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மஞ்சள், குங்குமம், மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்து ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மார்கோனி இமயவரம்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சக்தி, மகளிரணி பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

எருமைக்காக 2வது திருமணம், பக்காவாக ஸ்கெட்ச் போட்ட மணமகள் - மருமகளை போட்டுக் கொடுத்த மாமனார்