சீர்காழி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அங்கன்வாடியில் படிக்க சென்ற 3 வயது பெண் குழுந்தையை 17 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்து செங்கல்லால் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Continues below advertisement

அங்கன்வாடியில் மாயமான மூன்று வயது சிறுமி 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது மகள் அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது கை கழுவுவதற்காக வெளியே வந்த குழந்தை காணாமல் போயுள்ளது. உடனே அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் அருகில் உள்ள பகுதிகளில் சிறுமியை தேடியுள்ளனர். 

அங்கன்வாடி உள்ளே வந்து சென்ற 17 வயது சிறுவன் 

அப்போது அங்கன்வாடி கட்டிடத்துக்கு பின்புறம் உள்ள சந்து பகுதியில் சிறுமியின் சத்தம் கேட்டு சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுமி தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அங்கன்வாடி மைய கட்டிட வாயில் பகுதிக்கு வந்து சென்றதையும் பார்த்துள்ளனர்.

Continues below advertisement

பாதிக்கப்பட்ட சிறுமி

உடனடியாக இதுகுறித்து தகவல் சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பின்னர் அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

எஸ்.பி நேரில் ஆய்வு 

இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததும், அதனால் குழந்தை அலறியதால் செங்கல்லை எடுத்து தலையில் தாக்கியதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது. 

சிறார் கூர்நோக்கு இல்லம்

அதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை சீர்காழி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோவில் கைது செய்தனர். சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தஞ்சாவூர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவர்களையும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்படும் குழந்தைகள் 

குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் பெரும்பாலான குழந்தைகள் நன்கு அறிமுகம் ஆன நபர்களா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். நன்கு அறிமுக ஆன கொடூர வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், துன்புறுத்தல்களும் செய்து வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அழிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரும் இல்லை. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.