உங்கள் ஊரில் கரண்ட் பிரச்சனையா...? இதோ தீர்வு மக்களே...!

சீர்காழி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை நடைபெற்ற உள்ள மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் கலந்துக்கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என சீர்காழி இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அரசின் நடவடிக்கை 

தமிழ்நாடு அரசு மின்சார வாரிய துறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. மக்கள் எளிதில் அரசு திட்டங்களை அடைய வேண்டும் மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் மட்டும் பணிகளை அதிகாரிகள் எவ்வித இடையரும் இன்றி மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மின்சார வாரியத் துறையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் எளிதில் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டுகிறது. மேலும் அந்தக் கூட்டத்தின் மூலம் மின் துறையில் ஏற்படும் இடையூறுகளை களைய வழிவகை செய்து தருகிறது.

SBI: எஸ்பிஐ வட்டி விகித மாற்றம் இன்று அமல்.. மூத்த குடிமக்களுக்கு இப்படி ஒரு பாதிப்பா.?!

நாளை குறைதீர் கூட்டம் 

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நாளைய தினம் 16.04.2025 புதன்கிழமை அன்று மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. சீர்காழி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மயிலாடுதுறை கோட்ட மேற்பார்வை பொறியாளர் ரோணிக்ராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

TN Nursing Colleges: 11 செவிலியர்கள் கல்லூரி என்ன ஆச்சு? தவிக்கும் மருத்துவமனைகள் - வெளிநாடுகளில் குவியும் தமிழக நர்ஸ்கள்

மனுவாக குறைகள் 

இக்கூட்டத்தில் பொதுமக்களாகிய மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து மின்வாரியம் தொடர்பான குறைகளை சரி செய்துகொள்ளுமாறு சீர்காழி தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம், இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த கூட்டமானது ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வது புதன் கிழமைகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola