மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சின்னநாகங்குடியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் மதுரை ஆதீனம் 293 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்  கூறியதாவது:


தருமபுரம் ஆதீனத்திற்கு கட்டுப்படும் மதுரை ஆதீனம் 


தம்பிரான் சுவாமிகள் ஆதீனத்திற்கு கட்டுப்பட்டவர்கள். நான் தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரானாக இருந்தேன். ஆகையால் அந்த கட்டுப்பாட்டை மீறாமல் நடப்பேன். ஆதீனங்களுக்கான விதிமுறைகளை வகுப்பது, ஆதீனகர்த்தர்கள்தான். அப்போது செய்தியாளர்கள், அவ்வாறு விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்ற கேள்விக்கு, அவர் சிரித்தவாறே எங்கேயோ சுற்றி எங்கேயோ போகிறீர்கள் என தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நவக்கிரக ஸ்தலமாக விளங்குகிறது சூரியனார் கோயில் ஆதீனத்தின் 28 வது மடாதிபதியாக இருக்கும் 54 வயதான  மகாலிங்க சுவாமிக்கும் தற்போது 47 வயதாகும் பெங்களூரை சேர்ந்த ஹேமா ஸ்ரீ என்ற பக்தையை திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சூரியனார்கோயில் ஆதீனம் திருமணம் செய்து கொண்ட சர்ச்சைக் குறித்த விவகாரத்தை பேசாமல் தவிர்த்தார்.


Sabarimala: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.... சாமியை தரிசனம் செய்வது எப்படி? - புதிய அறிவிப்பு இதோ




மேலும் ஒரு மடத்தை பற்றி மற்றொரு மடத்தில் இருந்து கருத்து சொல்ல கூடாது என்றார். அவர்கள் எந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களோ அவர்களே தீர்வு சொல்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மதுரை ஆதீனம் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்து வருகிறார். 


தங்கத்தேரில் ஜொலித்த காஞ்சி காமாட்சி.. பக்தியுடன் தேரை இழுத்த பக்தர்கள்..




அமெரிக்க அதிபர் தேர்தல் 


அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு? இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையாது. பிரதமர் மோடி மிகவும் வலிமை வாய்ந்தவர். அவரது நடவடிக்கையால் சீனாவே பின்வாங்கிவிட்டது, மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கோட்டை விட்டதை மோடி நிமிர்த்திவிட்டார் என்றார்.


4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்




உதயநிதி ஸ்டாலின் 


உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதில் ஒன்றும் தவறில்லை. அது முதல்வரின் விருப்பம். அவர் கருணாநிதியின் பேரன், தமிழக முதல்வரின் மகன் என்ற முறையில் நியமித்திருக்கலாம். அப்படி நியமித்தது தவறில்லை என்றார்.


Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!