இந்தியா நாட்டின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி அவிழ்த்து பறக்கவிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மரியாதை செலுத்தி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

76-வது குடியரசு தினம்

இந்தியாவின் 76-வது குடியரசு தினம் ஜனவரி 26 தேதி இன்றைய தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 1950 -ம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை நினைவுகூரும் இந்த நாளில், இவ்விழாவானது அனுசரிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு 1950 -ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த நாளைக் குறிக்கும் வகையில், ஜனவரி 26 குடியரசு தினமாக இந்தியர்களின் இதயங்களில் ஒரு நேசத்துக்குரிய இடத்தைப் பிடித்துள்ளது. அந்த வகையில் இந்தியா இன்று தனது 76 வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகளை உள்ளடக்கிய எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட ஒரு குடியரசாக இந்தியா மாறியதை இந்த வரலாற்று நிகழ்வு குறிக்கிறது.

கொடி பறக்கவிடும் நடைமுறை 

இந்த நாளில், இந்தியக் கொடி கம்பத்தில் "ஏற்றப்படுவதை" விட கம்பத்தில்"அவிழ்க்கப்படுது மரபாக உள்ளது "கொடி ஏற்றுதல்" மற்றும் "கொடி அவிழ்த்தல்" என்ற சொற்கள் பெரும்பாலும் நாட்களுக்கு ஏற்ப ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை உண்மையில் தேசியக் கொடியைக் காண்பிக்கும் வெவ்வேறு வழிகளைக் குறிக்கின்றன. இந்தியாவில் சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்தன்றும் வெவ்வேறு வகையில் கொடி கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. 

கொடி ஏற்றுதல் Vs கொடி அவிழ்த்தல்:

கொடியை ஏற்றுவது என்பது கம்பத்தின் அடிப்பகுதியில் இருந்து மேலே உயர்த்தி, காற்றில் சுதந்திரமாக பறக்க அனுமதிப்பதாகும். இதற்கு நேர்மாறாக, அவிழ்ப்பது என்பது கம்பத்தின் உச்சியில் ஏற்கனவே ஒரு கயிற்றில் இணைக்கப்பட்டு சுட்டி கட்டப்பட்டுள்ள கொடியை அவிழ்க்க செய்து காற்றில் பறக்கவிடுவதாகும். முக்கிய வேறுபாடு விழாக்களின் போது கொடியின் தொடக்க நிலையில் உள்ளது. ஏற்றுதல் கொடி கீழே இருந்து தொடங்குகிறது. அதே நேரத்தில் அவிழ்த்தலின் போது, கம்பத்தின் உச்சியிலேயே கொடி சற்று சுறுக்கி கட்டப்பட்டு இருக்கும்.

இதையும் படிங்க: Republic Day 2025 Parade: குடியரசு தின அணிவகுப்பு - “பிரளய், சஞ்சய்” உயர்தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள், கலாச்சாரம்

குடியரசு தினத்தில் ஏன் கொடி பறக்கவிடப்படுகிறது?

குடியரசு தினத்தின் போது டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் குடியரசு தலைவர் கம்பத்தில் கட்டப்பட்ட கொடியை அவிழ்த்து பறக்கவிடுகிறார். 1950 -ம், இந்தியா ஏற்கனவே சுதந்திரம் பெற்று காலனித்துவ ஆட்சியிலிருந்து மாறியிருந்ததால், இந்த "பறக்கவிடுதல்" முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குடியரசு தினம் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுபடுத்துகிறது, இது இந்தியாவை ஒரு இறையாண்மை, ஜனநாயக குடியரசாக அதிகாரப்பூர்வமாக நிறுவியது சுதந்திர தினத்தின்போது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றுவார். 1947 -ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியா சுதந்திர நாடாக உருவெடுத்ததைக் குறிக்கும் வகையில், கம்பத்தின் அடிப்பகுதியில் இருந்து கொடி உயர ஏற்றப்படுகிறது.

இதையும் படிங்க: Thalapathy 69 Title: புதிய அவதாரத்தில் களமிறங்கிய விஜய்.. வெளியானது தளபதி 69 ஃபர்ஸ்ட் லூக்

மயிலாடுதுறை ஆட்சியர் 

மாவட்டம் மயிலாடுதுறை மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி குடியரசு தினவிழா தேசிய அவிழ்த்து பறக்கவிட்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்க விட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் 262 நபர்களுக்கு நற்சான்றிதழ்களும், 176 பயனாளிகளுக்கு சுமார் 8 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.