ரூ.1 கோடி வரை வங்கி கடன் - யாருக்கு தெரியுமா...? இதோ முழு விபரம்

முன்னாள் படைவீரர்களுக்கான "முதல்வரின் காக்கும் கரங்கள்" திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் வரை வங்கி கடன் வழங்கப்படுவதை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடர்பான மார்ச் 28 -ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ள கருத்தரங்கு மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இலவச மருத்துவ முகாமில் கூட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் 

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் நலனுக்காக "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்கள் மற்றும் திருமணமாகாத மற்றும் விதவை மகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலான முன்னாள் படைவீரர்கள் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்துள்ளனர். 

DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?

விணணப்பிக்க தகுதியானவர்கள் 

எனவே, சுயதொழில் செய்ய விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், அவர்தம் விதவையர்கள் திருமணமாகாத/விதவை மகள்கள் மற்றும் 25 வயதிற்கு உட்பட்ட திருமணமாகாத மகன்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மேலும், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடர்பான கருத்தரங்கு கூட்டம், முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இலவச மருத்துவ முகாம் 28.03.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நான் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவனா? – அண்ணாமலைக்கு சரமாரியாக பதிலடி கொடுத்த சேகர்பாபு

கூடுதல் விபரம் அறிய 

கூடுதல் விவரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ, தொலைபேசி (எண். 04365 - 299 765) மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Watch Video: மாயன் கோயிலில் அட்டகாசம்..! ஜெர்மன் சுற்றுலா பயணியை வெளுத்து வாங்கிய மக்கள், இதெல்லாம் தேவையா?

திட்டத்தின் முக்கியத்துவம்

"முதல்வரின் காக்கும் கரங்கள்" திட்டம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஒரு முக்கியமான திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம், அவர்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதார ரீதியாக முன்னேற முடியும்.‌ தமிழக அரசின் இந்த முயற்சியானது, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதை காட்டுகிறது. இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Vice Chancellor: 30 மாதமாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கும் பல்கலைகள்: ஆளுநர், மாநில அரசு மோதலுக்கு முடிவு எப்போது?

Continues below advertisement