தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும்"நம்ம ஊரு திருவிழாவில் கலந்து கொள்ள கலைக் குழுவிற்கான பதிவு நாளை மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. 

நம்ம ஊரு திருவிழா

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் "நம்ம ஊரு திருவிழா" நிகழ்ச்சி சென்னையில் பொங்கல் விழாவின்போது 18 இடங்களில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தின் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய 8 முக்கிய இடங்களில் இத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

London Heathrow Airport: பயங்கர ஃபயர்..! 1,350 விமானங்கள் ரத்து, இருளில் மூழ்கிய லண்டன், வீடியோக்கள் வைரல்

மார்ச் 22 மற்றும் 23 -ல் பதிவு

இந்த ஆண்டும் மேலே குறிப்பிடப்பட்ட 8 இடங்களில் இந்த கலைதிருவிழா நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், கலைக்குழுக்கள் தேர்வுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்ச் 22 & 23 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நிகழ்ச்சி பதிவு நடைபெறும்.

பதிவு நடைபெறும் இடம்

📍 ஞானாம்பிகை கலைக் கல்லூரி, மயிலாடுதுறை

நிகழ்ச்சிகள் மற்றும் தேர்வு தேதிகள்

📅 மார்ச் 22 (சனிக்கிழமை)

  • நையாண்டி மேளம்
  • கரகாட்டம்
  • காவடியாட்டம்
  • புரவியாட்டம்
  • காளை ஆட்டம்
  • மயிலாட்டம்
  • பறையாட்டம்
  • பம்பை கைச்சிலம்பாட்டம்
  • இறை நடனம்
  • துடும்பாட்டம்
  • ஜிக்காட்டம்
  • கிராமிய பாட்டு
  • பல்சுவை நிகழ்ச்சிகள்

IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை

📅 மார்ச் 23 (ஞாயிற்றுக்கிழமை)

  • தெருக்கூத்து
  • இசை நாடகம்
  • நாடகம்
  • கனியான் கூத்து
  • பொம்மலாட்டம்
  • தோல்பாவைக் கூத்து
  • வில்லுப்பாட்டு
  • தேவராட்டம்
  • ஒயிலாட்டம்
  • சிலம்பாட்டம்
  • மல்லர் கம்பம்
  • கும்மி
  • கோலாட்டம்
  • மரக்கால் ஆட்டம்
  • பரதநாட்டியம்
  • பழங்குடியினர் நடனம் மற்றும் இதர கலைகள்
  •  

தேர்வும் வாய்ப்புகளும்

 

📌 38 மாவட்டங்களில் கலைக்குழுக்கள் பதிவு செய்யலாம்.

 

📌 பதிவு செய்ய வரும் கலைஞர்களுக்கு மதிப்பூதியம் மற்றும் போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது.

 

📌 ஒவ்வொரு கலைக்குழுவும் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்படுவர்.

 

📌 இந்த வீடியோவின் அடிப்படையில் மாநில அளவிலான தேர்வு குழுவால் 8 இடங்களில் நடைபெறும் "சங்கமம் திருவிழா" நிகழ்ச்சிக்கான தேர்வு நடத்தப்படும்.

 

📌 இந்த திருவிழாவில் சிறப்பாக கலந்துகொண்ட குழுக்கள் 2026 ஆம் ஆண்டு சென்னை "சங்கமம் விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு பெறுவர்.

 

எனவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் இந்த அரசின் சிறப்பு வாய்ப்பினை அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.