சீர்காழி அருகே ஆணைக்காரச்சத்திரம் காவல் நிலையத்தில் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

பத்து ஆண்டுகளாக நிலத்தகராறு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி சுந்தரம். இவர் திமுகவில் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான சிவப்பிரகாசத்திற்கும் இடையே கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தகராறு இருந்து வருகிறது. 

Continues below advertisement

விசாரணைக்கு அழைத்த காவல் ஆய்வாளர்

மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ரவி சுந்தரம் என்பவர் நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள நிலத்தின் இருந்த மின் மோட்டாரை திருடியதாக சிவப்பிரகாசம் என்பவர் ஆணைக்காரச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் மீது விசாரணைக்காக இன்று காவல் நிலையத்திற்க்கு காவல் ஆய்வாளர் ராஜா அழைத்துள்ளார். 

காவல்நிலையம் முன்பு திரண்ட மக்கள் 

அப்பொழுது ரவி சுந்தரத்திற்கு ஆதரவாக காவல்நிலையம் வந்த உறவினர்கள் மின் மோட்டார் திருடிய வழக்கை விசாரிக்காமல், காவல்துறையினர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை பற்றி சிவப்பிரகாசத்திற்கு ஆதரவாக தொடர்ந்து பொய் புகார் சுமர்த்துவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்தில் இருந்து வெளியேற்ற முயன்றனர்.

தீக்குளிக்க முயற்சி 

அப்போது தொடர்ந்து தனது கணவர் மீது பொய் புகார் கூறி காவல்துறையினர் துன்புறுத்தி வருவதாலும், தினசரி காவலர்கள் வீட்டிற்கு வந்து தொந்தரவு அளிப்பதால் ரவிசுந்தரத்தின் மனைவி சுமதி தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென தனது உடல் மேல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அதனை பார்த்த காவல் ஆய்வாளர் ராஜா பெண்ணின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்காமல், அந்த பெண்ணின் மேலாடையை பிடித்து இழுத்துச் சென்றார். காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். 

காவல்நிலையத்தில் மயங்கி விழுந்த பெண்

அதனை தொடர்ந்து ரவி சுந்தரத்தின் உறவினர்கள் பெண்காவலர் அங்கு இருந்த நிலையில் பெண்ணின் மேலாடையை இழுத்து சென்ற ஆய்வாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்நிலையத்தில் ரவி சுந்தரத்தின் மனைவி சுமதி மயக்கமடைய அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

சக காவலரின் சட்டையை பிடித்து இழுத்து சென்ற காவல் ஆய்வாளர்

இந்த சூழலில் காவல்நிலைத்து முன்பு திரண்ட ரவி சுந்தரத்தின் ஆதரவாளர் என எண்ணி சீருடையில் இல்லாமல் மாற்று உடையில் இருந்த காவலர் ஒருவரின் சட்டையை பிடித்து இழுந்து வந்த காவல் ஆய்வாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்நிலையத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் காவலரை கூட அடையாளம் தெரியாத வண்ணம் ஒரு காவல் ஆய்வாளர் இருப்பாரா..? என பலரும் அவருக்கு கண்டனத் தெரிவித்துள்ளனர். மேலும் மாற்று உடையில் காவலர் இருந்தாலும் அவர் அணிந்திருந்த ஆடையில் தமிழ்நாடு காவல்துறை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிட்ட தக்கது.