கஜகஸ்தானைச் சேர்ந்த இளம் ஜோடி தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காரணமாக திருக்கடையூரில் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து தமிழ் கலாச்சாரப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளனர். 


தமிழகம் வரும் வெளிநாட்டவர்கள்


வெளிநாட்டவர்கள் பலர் இந்தியாவின் கலாச்சாரத்தின் மீது பற்று கொண்டு, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்டு, தமிழ்நாட்டுக்கு படையெடுக்கின்றனர். ஆன்மீகம் உள்ளிட்ட சம்பிரதாயங்களில் ஈடுபடுகின்றனர். அதுபோன்று தற்போது மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த டிமித்ரி - எலேனா ஆகியோர் வருகைதந்து தமிழர்களின் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


Ramanuja Avatar Utsavam: "கோவிந்தா கோவிந்தா” முழக்கம்.. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்




திருக்கடையூரில் திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு ஜோடி 


கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் டிமித்ரி - எலேனா ஆகிய இருவரும் கணினி மென்பொருள் பொறியாளர்களாக உள்ளனர். உலகம் முழுவதும் சுற்றி வரும் இவர்கள் இந்து மதத்தின் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் கொண்ட பற்றுதல் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை தமிழ்நாடு வருகை புரிந்து கோயில்களை வணங்கி வழிபாட்டு செல்கின்றனர். இவர்கள் இருவரும் தமிழ் கலாச்சாரம் மீது தீராத ஆர்வம் கொண்டதால் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய முடிவெடுத்து,  அதற்காக இந்தியாவிற்கு வருகை தந்தனர். 


Job Alert: விண்ணப்பிக்க மறந்துடாதீங்க! காத்திருக்கும் வாய்ப்புகள் - பணி குறித்த முழு விவரம்!




திருக்கடையூர் கோயில் வழிபாடு 


தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் வந்த கஜகஸ்தான் ஜோடி அங்குள்ள உள்ள தனியார் திருமணம் மண்டபம் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அப்போது அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மாலை மாற்றி தாலி அணிவித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நல்லாடை கிராமத்தைச் சார்ந்த நாடி ஜோதிடர் கோபிநாத் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு மாலையும் கழுத்துமாக சென்ற புதுமண தம்பதியினர் சுவாமி அம்பாள் சன்னதிகளில் தரிசனம் செய்து வழிபட்டனர்.


West Nile Fever: வெஸ்ட் நைல் காய்ச்சல்: அறிகுறிகள் இருந்தால் உடனடி பரிசோதனை.. பொது சுகாதார துறை உத்தரவு..