சீர்காழி அருகே நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஆய்வுக்கு வந்திருந்த துணை பொது மேலாளர் வாகனத்தை கொள்முதல் நிலையத்தின் உள்ளே வைத்து வாயிற் கதவை பூட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருவம் தவறிய மழை பொழிவு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி, ஆளஞ்சேரி, அரூர், மருதங்குடி, அத்தியூர், ஆதமங்கலம், கோயில்பத்து உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழை பொழிவால் அவர் சாகுபடி செய்த சம்பா பயிர்கள் முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனால் கடும் சிரமங்களுக்கு மத்தியில் மீண்டும் கடன்பட்டு கூடுதல் செலவு செய்து மறுசாகுபடி செய்தனர்.

விழாக்கோலம் பூண்ட சீர்காழி - கொடியேற்றத்துடன் தொடங்கியது சட்டைநாதர் கோயில் சித்திரை பெருவிழா

காலம் தாழ்த்திய ஊழியர்கள் 

தற்போது நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு, அறுவடை செய்த நெல் மூட்டைகளை நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொண்டு வந்த வைத்தனர். ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வதை தமிழக அரசு ஏற்கனவே நிறுத்திவிட்டதாகவும், மேலும் விவசாயிகள் தற்போது கொண்டு வந்துள்ள நெல் தரம் குறைவாக இருப்பதாக கூறி நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

கொள்முதல் நிறுத்தம் 

இந்த சூழலில் இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. இவ்வாறு சுமார் 200 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நெல்லை கொள்முதல் செய்யாமல், நிறுத்தியுள்ளனர். மேலும் கொள்முதலுக்கு வந்துள்ள நெல் தரமற்ற முறையில் சுருங்கிய நிலையில் இருப்பதாக தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஆய்வு செய்து கொள்முதல் செய்ய வேண்டாம் என கூறியதால், கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

TN School Reopen: பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? விளாசும் வெயில்- அமைச்சர் அன்பில் பேட்டி

விவசாயிகள் போராட்டம் 

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து அங்கு ஆய்வுக்கு வந்த கொள்முதல் துணைப் பொது மேலாளர் குமார் வாகனத்தை கொள்முதல் நிலையத்தில் வளாகத்தில் உள்ளே வைத்து வாயிற்கதவை விவசாயிகள் பூட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து விவசாயிகளின் நெல் மூட்டைகளில் கொள்முதல் செய்ய வேண்டும், தர கட்டுப்பாட்டு அதிகாரி உமா மகேஸ்வரி கண்டித்தும் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியில் விவசாயிகள் கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விவசாயிகளிடம் பேசிய அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை தற்காலிக விலக்கிக்கொண்டனர்.