மனிதாபிமான சேவைகளுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் அறிவுறுத்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருது
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்புப் பணிகளில் பணியாற்றி மனிதாபிமானம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு வரும் இருபாலினத்தவருக்கும் வழங்கப்படும் மதிப்புமிக்க ஜீவன் ரக்ஷா பதக் விருதுகளுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பிக்க அறிவிப்பு அறிவுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள், 2025 ஆம் ஆண்டிற்கான இந்த ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் அறிவுத்தியுள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த விருது
ஆயுதப்படை, காவல்படைகள் மற்றும் தீயணைப்புத் துறைகளில் மனிதாபிமானம் சார்ந்த சவாலான பணிகளில் ஈடுபட்டு வரும் இருபாலினத்தவரின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டே ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள் வழங்கப்படுகின்றன. உயிர்களைக் காக்கும் பணியில் ஈடுபடும் இந்தத் துறைகளின் முக்கியத்துவத்தையும், அவர்களின் அர்ப்பணிப்பான செயல்களையும் இந்த விருதுகள் போற்றுகின்றன.
யார் விண்ணப்பிக்கலாம்?
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த, ஆயுதப்படைகள், காவல்படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இருபாலினத்தவரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குறிப்பாக, நீரில் மூழ்குதல் விபத்துக்கள், தீ சம்பவங்கள் போன்ற நிகழ்வுகளில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுதல், மின்சாரம், நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் இருந்து மீட்பு நடவடிக்கை போன்ற மனிதாபிமானம் சார்ந்த சிறந்த செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி
தகுதியுள்ள நபர்கள், தங்கள் கருத்துருவினை (விண்ணப்பத்தினை) மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 5- வது தளம் என்ற முகவரிக்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.08.2025 அன்று மாலை 5.45 மணி ஆகும். காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மனிதாபிமான சேவையின் முக்கியத்துவம்
ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள், சமுதாயத்தில் தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் செயல்படும் வீரர்களைப் போற்றுவதோடு, மற்றவர்களையும் இது போன்ற மனிதாபிமான செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கின்றன. ஆபத்தான சூழ்நிலைகளில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் இந்தத் துறைகளின் செயல்பாடுகள், சமுதாயத்தின் பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்திற்கும் அத்தியாவசியமானவை. இந்த விருது, அத்தகைய சேவைகளை அங்கீகரித்து, அவர்களை கௌரவிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் மனிதாபிமான சேவைகளுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.