சினிமா துறைக்கும், தேனி மாவட்டத்திற்கு பல்வேறு முக்கிய தொடர்புகள் இருந்து வருகிறது. சினிமாத்துறையில் இசைஞானி இளையராஜா முதல் பாரதிராஜா வரை என பல்வேறு பிரபலங்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகுகளை ஒட்டியும், தேனி மாவட்ட மக்களை மையப்படுத்தியும்  குறித்து பல படங்கள் வெளியாகி வருகின்றன.




இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அழகிய இயற்கையுடன் கூடிய அதிகப்படியான இடங்களில் தமிழ் சினிமாக்கள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த சூழ்நிலையில் தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, கம்பம் போன்ற சுற்றுவட்டாரங்களில் கடந்த சில தினங்களாக நடிகர் கார்த்திக் நடிப்பில் தயாரிக்கப்படும் விருமன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு ஆனது ஆரம்பிக்கப்பட்ட ஒருசில நாளிலேயே நிறுத்தப்பட்டது.




வலிமை படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தல 61-இன் வெளியீட்டு தேதி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.


கம்பத்தில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் நடிகர் கார்த்திக் நடிக்கும் படப்பிடிப்பு சென்ற சில தினங்களுக்கு முன்பாக துவங்கியது. படப்பிடிப்பும் நடந்து வந்த நிலையில் பொதுமக்கள் அதிகமானோர் அப்பகுதியில் கூடினர். அதிலும் படப்பிடிப்பின்போது சமூக இடைவெளி முகக்கவசம் இன்றி துணை நடிகர்கள் கூடியதால், படப்பிடிப்பை ரத்து செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டார். பின்னர் படப்பிடிப்பு குழுவினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,




வருவாய் துறையினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு படப்பிடிப்பு குழுவினர் தலைமைச் செயலகம் மூலமாக படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றதாக ஆவணங்களை வழங்கினார். மேலும் சுருளிப்பட்டி ஊராட்சி எழுத்தர் ஆட்சியரிடம் கூறுகையில் 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்த ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்காக பத்தாயிரம் ரூபாய் செலுத்தி உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.




இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் படப்பிடிப்பு நிர்வாகியிடம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் படப்பிடிப்பை நடத்துமாறு அறிவுறுத்தினார். அதன் பெயரில் விருமன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.


 


மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


 


’’கடந்த மாதம் 29 ஆம் தேதி கேரள நீர்பாசன துறை அமைச்சர் ரோஸின் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் தமிழகத்திற்கு தெரியாமல் அணையில் 136 அடி இருக்கும் போதே தண்ணீரை திறந்து விட்டதாக புகார் எழுந்தது’’


 


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண