திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் இயற்கை அழகினை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர் , தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது,
இந்நிலையில் இங்கு நிலவும் குளிர், மிதமான வெப்பம், மழை உள்ளிட்ட காலநிலையை பெரும்பாலனோரை ரசிக்க வைக்கிறது, போதைப்பழக்கத்திற்குள்ளானவர்கள் கஞ்சா மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மட்டுமே விற்க்கப்படும் போதை காளான் (மேஜிக் மஷ்ரூம்) விற்பனையும் அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தற்பொழுது அதிகரித்துள்ளது, சுற்றுலா வரும் வெளிமாநில இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து இந்த போதை காளான் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.
இதற்கு இன்னொரு பெர்யர் மேஜிக் மஷ்ரூம் ( தாவிரவியல் பெயர் சைலோசைபி) என்றும் இதை உட்கொள்ளுபவர்களுக்கு நீண்ட நேர போதை ஏற்படுவதாக கூறி பெரும்பாலும் கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் இந்த போதை காளான் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் கே.ஆர்.ஆர் கலையரங்கம்,செட்டியார் பூங்கா ,சின்ன பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிப்படையாக போதைகாளான் விற்பனை செய்வதால் வெளிமாநிலத்தோர்க்கு போதை காளான் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த போதை பொருளின் பாதிப்புகள் தெரியாமல் இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து விடுகின்றனர், போதைகாளான் போன்ற போதை பொருள்களினால் உடலில் பல்வேறு பாதிப்புகளும் எற்பட்டு பலரும் உயிரிழந்தாகவும் கூறப்படுகின்றது. கொடைக்கனல் சுற்றுலா தலங்கள் உட்பட அதனை சுற்றியுள்ள கிராமங்கள் என போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் போதை பொருள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற போதைவஸ்துக்களை விற்பனை செய்வோரை கண்டறியவும், பொது இடங்களில் விற்பனையில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.
தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!
ஊரக உள்ளாட்சி தேர்தல் திண்டுக்கல் நிலவரம் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,