சிவகாசி ராஜபாளையம் பகுதிகளில் கட்சி நிகழ்ச்சிக்காக தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறிய போது, தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான் தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும் ஏதோ ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் கவர்னராக இருப்பதினால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் கவர்னரின் இந்த கருத்துக்கு தே.மு.தி.க., தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது என்றும் தெரிவித்தார். மக்கள் ஐடி எடுப்பது என்பது மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும் என்றும் ஆதார் ஐடி மூலம் அனைத்து சலுகைகளும் மக்களிடம் சென்று அடைகிறது. இந்த நிலையில் மக்கள் ஐடி என்பது தேவையில்லை.
முதலில் வெளிமாநிலத்தால் எத்தனை நபர்கள் இங்கே வேலை செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி ஐடி எடுத்தால் என்ன ஆவது எனவே இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் மக்களிடம் கருத்து கேட்டு தான் இந்த திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம் தற்போது உள்கட்சி தேர்தல் பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது முடிந்தவுடன் செயற்குழு கூட்டப்பட இருக்கிறது. வருத்தப்படாதீங்க தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி குறித்து தலைவர் அவர்கள் தலைமைக் கழகத்தில் அறிவிப்பார் எனக் கூறினார்.
க்ரைம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை தீயிட்டு கொளுத்திய காதலன் - இளம்பெண் உயிரிழப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்