தனது நிறுவன ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள ஐடி நிறுவனம் ஒன்று இலவசமாக வரன் பார்த்துக் கொடுத்தும், திருமணம் செய்து கொண்டால் சம்பள உயர்வும் வழங்கி வருகிறது. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ள அந்நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, கவர்ச்சிகரமான காப்பீடு திட்டம், தொழிலாளர் நலன் சார்ந்த திட்டங்கள் போன்றவற்றை வழங்குவது வழக்கம். ஆனால், இதற்கு மாறாக மதுரையில் உள்ள ஐடி நிறுவனமான ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோ சொலியூசன்ஸ் (Sri Mookambika Infosolutions) வேறு பல யுக்திகளை கையாண்டு வருகிறது. இங்கு பணியாற்றும் திருமணம் ஆகாத ஊழியர்களுக்கு இலவசமாக வரன் பார்த்துக் கொடுக்கிறது.




ஆச்சரியமாக உள்ளது அல்லவா, இது மட்டுமல்ல, அவர்கள் பார்த்துக்கொடுக்கும் வரனை திருமணம் செய்து கொண்டால் சம்பள உயர்வு வழங்கி, பணியாற்றும் அனைவருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வும் அளிக்கிறது. இம்முயற்சியை பற்றி அதன் நிறுவனர் செல்வகணேஷ், "இங்கு பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் கிராமங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வயதான பெற்றோர்களை கொண்டிருக்கிறார்கள். அல்லது, அவர்களுக்கு சரியான உலகக் கண்ணோட்டம் இல்லை.


இதனால், தங்களுக்கு தகுந்தாற் போல சரியான பொருத்தத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள். எனவே, தான் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த முன்மாதிரி திட்டத்தை கையில் எடுத்தோம். இந்த ஐடி நிறுவனம் முதலில் 2006-ம் ஆண்டு சிவகாசியில் தொடங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின்னர் மதுரைக்கு மாற்றப்பட்டது. தற்போது, 750-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறோம். இதில் 40% ஊழியர்கள் இதே நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருபவர்கள்" என்றார். இந்த நீண்ட கால ஊழியர்கள் குறித்து பேசிய செல்வகணேஷ், இவர்கள் வேறு நிறுவனங்களுக்கு செல்ல மாட்டார்கள் என்று நினைத்து அவர்களை அப்படியே விட்டுவிட முடியாது.




வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வரும் முன்பே நாங்கள் அவர்களுக்கு உரியதை வழங்குகிறோம். இவற்றின் விளைவாக, ஊழியர்கள் குறைவது என்பது எங்கள் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக 10%-க்கும் குறைவாகவே உள்ளது" என்கிறார். மேலும், "ஊழியர்களுடன் நல்ல பிணைப்பை உருவாக்க நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்ய வேண்டும். எல்லாவற்றையும் வணிக கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது" என்கிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண