தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமான தேனி மாவட்டத்தின் இரு மாநில எல்லை பகுதியாக விளங்குவது கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட லோயர்கேம்ப், குமுளி இந்த பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து சார்பில் பேருந்து நிலையம் உள்ளது. ஆனால் தமிழகத்திற்கு அரசு பேருந்துகள் நிறுத்த அரசு சார்பிலான பேருந்து நிறுத்தம் கிடையாது. பல ஆண்டுகளாக இங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வந்தது.


NASA: இது பிரபஞ்சத்தின் விசித்திரம்..எல்லாமே மர்மம்.. புதிய கண்டுபிடிப்பால் ஷாக்கான நாசா!




குறிப்பாக கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற உலக புகழ் வாய்ந்த சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த பகுதியை கடந்தே செல்ல வேண்டும் ஆதலா தமிழக பகுதியில் அரசு சார்பில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட லோயர்கேம், குமுளியில் அரசு பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனவும் அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். இந்த சூழலில் கூடலூர் நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் தமிழக, கேரள இரு மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதியில் அரசு பேருந்து கட்ட ஓர் மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Omicron BA 4: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா! அமைச்சர் சொன்ன புதுத்தகவல்!!




கூட்டத்தில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தமிழக எல்லையான குமுளியில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.7½ கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதைத்தொடர்ந்து கூடலூர் நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 17-வது வார்டு சுள்ளக்கரை ஓடையில் தடுப்பு சுவர் அமைத்தல், 10-வது வார்டு பெத்துகுளத்தில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்பட 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள், தங்கள் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.


Rajiv Gandhi death anniversary: ரயில் டிக்கெட்டுக்கு கணினி! மூலைமுடுக்கெல்லாம் PCO! ராஜீவ்காந்தி செய்த சூப்பர் சம்பவங்கள்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண